கொழும்பு பகுதிகளில் ஒரு வாரத்தில் 120 இளைஞர், யுவதிகள் கைது

கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 120 இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையங்களிலும், இரகசிய முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இது தொடர்பில் உறவினர்கள் தன்னிடம் முறையிட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.

கொழும்பிலும் சுற்று புறங்களிலும் தமிழர்கள் கைது செய்யப்படுகின்றமை குறித்து கேட்ட போதே பிரதியமைச்சர்  இவ்வாறு தெரிவித்தார்.

தம்மை அடையளப்படுத்தக்கூடிய ஆவணங்கள் இருந்தும் இளைஞர்கள் கைது செய்யப்படுவதாகவும், அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் அனைவரும் வடக்கு கிழக்கு மற்றும் மலைய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.