வன்னியில் இந்திய இராணுவத்தினர் படுகாயம்

வன்னியில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்கா இராணுவத்திற்கு உதவியாக சென்ற இந்திய இராணுவத்தினர் படுகாயமடைந்து கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வன்னி பெரும் நிலப்பரப்பில் இந்த வாரத்தில் இடம்பெற்ற கடும் மோதலினால் சிறிலங்கா இராணுவத்திற்கு உதவியாக சென்ற இந்திய இராணுவத்தின் நான்கு நிபுணர்கள் படுகாயமடைந்து கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயப்பட்ட இந்திய இராணுவத்தின் முழுவிபரங்கள் கிடைக்காவிட்டாலும் சிறிலங்காவுக்கு இந்தியா 3000 இந்திய துருப்புக்களை அனுப்பியுள்ளதாக இந்திய தமிழ் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளது. இதேவேளை அண்மைய நாட்களில் இந்தியா ராடர்கள் உட்பட இராணுவ தளபாடங்களை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.