டென்மார்க் ஐ நா முன்பாக அற்றோர் அழிபசி தீர்க்கும் அறப் போராட்டம்

p1070083டென்மார்க் தலைநகர் கொப்பன்காபனில் அமைந்துள்ள ஐநா அலுவலகத்தின் உலக உணவுத்திட்ட செயற்பாட்டுத் திணைக்களத்தின் முன்பாக 07.05.09 அன்று மாபெரும் அறப்போராட்டமொன்று டென்மார்க் வாழ் தமிழ்மக்கள் அனைத்து நகரங்களிலும் இருந்து வந்து பாரிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இப் போராட்டமானது ஈழத்தில் தமிழ்மக்கள் மீதான பட்டினிச்சாவை தடைசெய்யக் கோரியும், மருத்துவம், குழந்தைகளின் சுகாதார வசதிகளை உடனடியாக மேம்படுத்தக் கோரியும் செயற்பாட்டாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்டடிருந்தது.

அமைதிவழியில் நின்று ஐநா பிரதான வாயிலின் முன்பாகப் போராட்டம் நடாத்தப்பட்டபோது டென்மார்க் பொலிசார் போராட்டத்தை இடைநடுவில் தடுத்து நிறுத்தக் கோரியும் தொடர்ந்தும் உரத்தகுரலில் கோசங்கள் எழுப்பப்பட்டதன் காரணமாக உலக உணவுத்திட்டப் பொறுப்பாளர்களால் 4 தமிழ் மக்கள் உள்ளே அழைக்கப்பட்டு நேரடியாகப் போராட்டத்தின் முக்கியத்துவம்பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

ஐநா பொறுப்பாளரினூடாகத் தாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடிக் கவனத்தில் எடுப்பதாக வாக்குறுதியளிக்கப்பட்டதுடன் நேற்றையதினம் தங்கள் நடவடிக்கையின் பெயரில் செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக 50 ஆயிரம் மக்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ, சுகாதார வசதிகள் மேற்கொண்டு வினியோகத்திற்குத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

08.05.09 அன்று வீபோ நகரத்தில் நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் டெனிஸ் மக்களுடன் இணைந்து தேவாலயமொன்றில் ஜீவகாருண்ணப் பிரார்த்தனை ஒன்றை நடாத்தவிருக்கின்றனர் அத்தருணம் அண்மையில் உள்ள அனைத்துத் தமிழ் மக்களும் அப் பிரார்த்தனையில் கலந்துகொள்ளும் வண்ணம் அன்பாக அழைக்கப்படுகின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.