இனமுரண்பாட்டை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என வர்ணிக்கமுடியாது – பிரித்தானிய பிரபுக்கள் சபை

இலங்கைத் தமிழர்களுடனான இனமுரண்பாட்டை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சித்தரித்துவருவதாக பிரிட்டன் போர்ட்ஸ்மௌத் ஆயர் விமர்சித்துள்ளார்.

இலண்டனில் பிரபுக்கள் சபையில் கேள்வி நேரத்தில் கருத்து வெளியிடுகையிலேயே போர்ட்ஸ்மௌத் ஆயர் ஹெலனத் சிறி வென்சன் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பற்றி விமர்சித்துள்ளார்.

இலங்ககைத் தமிழர்கள் எனப்படுவோர் அந்த நாட்டின் புராதன மக்கள். அங்கு அவர்களுக்கு பெரும்பான்மை சிங்களவர்களுடன் இன, மத, கலாசார முரண்பாடுகள் உள்ளதுடன் இது ஒரு புதிய விடயம் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பதமானது நவீன பிதற்றல் முறையில் அம்சம் என இச்சபையில் உள்ளவர்களும் வெளியில் உள்ளவர்களும் நன்கு அறிவர் எனவும் ஆயர் சிறி வென்சன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அங்கு கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சரக அதிகாரி மல்லோச் பிரௌன், ஆயருடனான கருத்தில் ஒத்துப்போகும் அதேவேளை, பயங்கரவாதத்தில் மீதான போர் என்ற வார்த்தை வழக்கத்திற்கு மாறான வார்த்தை என்பதுடன் அது தந்திரோபாய செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும்.

சிறிலங்காவில் இரு இனங்களுக்கிடையிலான சச்சரவே இது என்பது வெளிப்படையாக தெரிகின்றது. ஆனால் இந்தச்சச்சரவு தற்போது வன்முறைகள் அதிகமுள்ள சண்டையாக மாறியுள்ளதுடன் இரண்டு தரப்பினரும் வன்முறையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.