அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதானால் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ அனுமதி: ஜனாதிபதி

mahindaஅரசாங்கத்தின் வரைமுறை கட்டுப்பாட்டுகளுக்கு அமைய அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் செயற்படுமானால், அவற்றுக்கான பூரண ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் வரையறைகளுக்கும் கட்டுப்பாட்டுக்கும் அமைய அமைய தொழில் படும் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு, இலங்கையில் தொழில்படுவதற்கான உரிமைகளை வழங்க அரசாங்கம் தயார் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில், ஜனாதிபதிக்கும், அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இந்த கருத்தினை வெளியிட்டார்.

இந்த சந்திப்பின் போது, வடக்கு மக்களிற்கான மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதானால், அரச சார்பற்ற அமைப்புக்கள் முகம் கொடுக்க வேண்டிய பிரச்சனைகள் குறித்தும, அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும், வழி முறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.