இலங்கையில் ஆபத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவும் வகையிலான முனைப்புகளை மேற்கொள்ளுங்கள் ‐ ஓப்ரா வின்பெரியிடம் மாயா கோரிக்கை

miaopharaஇலங்கையில் ஆபத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவும் வகையிலான முனைப்புகளை மேற்கொள்ளுமாறு இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பிரித்தானியாவைச் சேர்ந்த ஆங்கிலப் பாடகியான மாயா அருள்பிரகாஷம், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குனரான ஓப்ரா வின்பெரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில்; இந்த கோரிக்கையை மாயா விடுத்துள்ளார்.

இலங்கை விமானப்படையினர் இந்த வாரத்தில் தமிழர்களின் வீடுகள், முகாம்கள் மீது குண்டு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்த மாயா, ஒப்ராவின் கைகளை இறுக்கப் பற்றி பிடித்துவாறு இந்தக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாயா அருள்பிரகாஷம், கிரேமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டதுடன், டைம்ஸ் சஞ்சிகையின் கருத்துக் கணிப்பு இந்த வாரத்தில் மிகவும் பிரபலமான 100 பேரில் ஒருவர் எனத் தெரிவு செய்துள்ளது.

இலங்கையில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மக்கள் ஆபத்தில் உள்ளனர். எனினும் தனது பிரபலத்தைக் கொண்டு இதனை முன்னெடுக்க முடியும் என தான் கருதவில்லை எனவும் இலங்கையில் தமிழர்களின் நிலைமைகளை ஊடகங்கள் மூலம் வெளிச்சத்து கொண்டு வரவேண்டும் எனவும் மாயா குறிப்பிட்டுள்ளார். தமிழர்களின் முகாம்கள் தொடர்பாகவும் தயவு செய்து நீங்கள் எதையாவது செய்ய வேண்டும் எனவும் மாயா, ஒப்ராவிடம் கேட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.