யேர்மனியில் 7ம் நாளை எட்டிவுள்ள கிரி,ராகுல் ஆகியோரின் பட்டினிப்போராட்டம்.

_dsc9284யேர்மனி டுசில்டோவ் மாநிலப் பாராளுமன்றத்தின் முன்பாக கிரி, ராகுல் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டுவரும் பட்டினிப் போராட்டம் நாளை சனிக்கிழமை 7வது நாளை எட்டியுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை இவ் இளைஞர்கள் போராட்டத்தை முன்னெடுத்துவரும் பந்தலுக்கு வருகை தந்த யேர்மனிய அரசியற் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் ராகுல், கிரி ஆகியோருடன் உரையாடியுள்ளனர். உடனடி யுத்தநிறுத்தம் மற்றும் யுத்தம் நடைபெறும் பகுதியில் கிக்கியுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்ப யேர்மனிய அரசு நடவடிக்கை உடன் எடுக்க வேண்டும் என இவ் இளைஞர்கள் அரசியற் கட்சியினரிடம் வேண்டுகோள் விடுத்ததுடன் தமது வேண்டுகோள் நிறைவேற்றப்படும் வரை தாம் தமது போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என உறுதியாகத் தெரிவித்தனர்.
இதே வேளை ராகுல்,கிரி ஆகியோருக்கு ஆதரவாக பொதுமக்கள் இன்று
வெள்ளிக்கிழமையும் அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்டதுடன் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்று கூடி தமது ஆதரவை இவ் இளைஞர்களுக்குத் தெரிவித்தனர் மாலை 7 மணியளவில் தாயகத்தில் உயிர்நீத்த மக்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி அங்குகூடியிருந்த மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.