பான்‐கீ‐ மூன் எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம்?

ban-ki-moonஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்‐கீ‐ மூன் எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் வசதிகளை பார்வையிடுவதற்காக வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பான்‐கீ‐ மூனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஒருநாள் விஜயமாக இலங்கை வருவார் என எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரி கூறியுள்ளார். ஐநா செயலாளருடன், ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரிகளும், நலன்புரி நிலையத்திற்கு சென்று நிலைமைகளை பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.