ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் சூழ்நிலையே இலங்கையிலும் தொடரும் Stratfor

Stratfor

Stratfor

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மரபு ரீதியான யுத்தம் நிறைவடைந்தாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நிலவும் யுத்த சூழ்நிலை இலங்கையிலும் தொடரும் என பிரபல அமெரிக்க ஆய்வு மையமான ஸ்ட்ராட்பொர் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக இல்லாதொழிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றியளிக்காது என தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலவுவதனைப் போன்றே நிலப்பரப்புக்கள் கைப்பற்றப்பட்டப் பின்னரும் இலங்கையின் பல பகுதிகளிலும் தாக்குதல் அச்சம் தொடரும் என குறிப்பிடப்படுகிறது.

அரசாங்கப் படையினர் நிலப்பரப்புக்களை கைப்பற்றியதன் பின்னர் மக்களுடன் கலந்து கெரில்லா முறையிலான போராட்டத்தினை புலிகள் தொடரக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே இலங்கையில் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதனை தவிர்க்க முடியாது என ஸ்ட்ராட்பொர் சுட்டிக்காட்டியுள்ளது.

மிகவும் வலுவான ஓர் புலனாய்வுப் பிரிவினை விடுதலைப் புலிகள் கொண்டிருப்பதாகவும், குறிப்பாக பெண் போராளிகளின் மூலம் பல்வேறு புலனாய்வுத் தகவல்கள் திரட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப் போராட்டத்திற்காக அர்ப்பணிப்புடன் போராடக் கூடிய போராளிகள் இருக்கும் வரையில் தமிழீழ போராட்டம் ஓயாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அல் கய்தா தீவிரவாதிகள் எவ்வாறு பாகிஸ்தானையும், ஆப்கானிஸ்தானையும் பயன்படுத்தி பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்களோ அதேபோன்று தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழகத்தில் நிலைகொண்டு போராட்டத்தை தொடர்வார்கள் என ஸ்ட்ராட்பொர் சுட்டிக்காட்டியுள்ளது.

ஸ்ட்ராட்பொர் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் இயங்கி வரும் பிரபல பாதுகாப்பு ஆய்வு மையம் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் ஆதரவு இருக்கும் வரையில் அவர்களது நடவடிக்கைகளை முற்றாக இல்லாதொழிப்பதென்பது நடைமுறைச் சாத்தியப்படாற்றதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலப்பரப்புக்கள் கைப்பற்றப்பட்டதன் ஊடாக அந்த அமைப்பின் போராட்ட இயலுமை முழுமையாக மழுங்கடிக்கப்படும் என்பதற்கு உத்தரவாதமில்லை என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.