வேல்ட் விசன் நிறுவனத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் புளொட் தொடர்பு

வேல்ட் விசன் நிறுவனத்தில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவத்துடன் புளொட் அமைப்பு உறுப்பினர்களுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.வேல்ட் விசனுக்கு சொந்தமான பல கோடி ரூபா பெறுமதியான தொடர்பாடல் சாதனங்களை புளொட் உறுப்பினர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 40 புளொட் உறுப்பினர்களை வவுனியா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வவுனியாவில் இயங்கி வரும் வேல்ட் விசன் நிறுவனத்தின் கணனி மற்றும் தொலைத்தொடர்பாடல் சாதனங்களே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டதாக ஏற்கனவே தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொள்ளையிடப்பட்ட உபகரணங்களை விற்பனை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.