சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மீது இலங்கை அரசு குற்றச்சாட்டு

இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ தாக்குதல்கள் தொடர்பில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பதற்றத்தை தூண்டியதாக இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.  சர்வதேச சமூகத்தின் மத்தியில் பயப்பிராந்தியை ஏற்படுத்தும் வகையில், மோதல் பகுதிகளின் தேவைகளுக்கென முப்பத்தையாயிரம் பிரேதப் பைகளை வாங்க செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு செய்ததாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வழமை போன்று தாம் பிரேதப் பைகளை வாங்கியதாக கூறுகின்ற செஞ்சிலுவைச் சங்கம், ஆனால், தாம் வாங்கிய பைகளின் எண்ணிக்கைக்கும், அரசாங்கம் கூறும் எண்ணிக்கைக்கும் நிறைய வேறுபாடு இருப்பதாக கூறியுள்ளது.

கொழும்பில் உள்ள தமது அலுவலகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் கல் வீசித்தாக்கப்பட்டதாகவும், தமது அமைப்பு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

அதேவேளை வடபகுதி மோதல்களில் அகப்பட்டுள்ள இரண்டரை இலட்சம் மக்கள் உணவு நெருக்கடியை எதிர்கொள்வதாக உலக உணவுத்திட்டம் எச்சரித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் நடுப்பகுதிக்கு பின்னர் அங்கு உணவு வாகனங்களை தம்மால் அனுப்ப முடியாமல் இருப்பதாக உலக உணவுத்திட்டம் கூறியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.