கடும் சமர் தொடர்கிறது; நேற்றிரவு மட்டும் 5000 மேற்பட்ட எறிகணை வீச்சு;3000 மக்கள் பலி;5000 மேல் காயம்

ban-ki-moonராணுவம் மக்கள் பகுதி மீது கண்மூடித்தனமான ஷெல் வீச்சுகளை மேற்கொள்கிறது; நூற்று கணக்கில் பொதுமக்கள் பலி; ஆயிரக்கணக்கில் இறந்திருக்கலாம் என அச்சம்;நேற்றிரவு மட்டும் 5000 மேற்பட்ட எறிகணைகள் ஏவப்பட்டன;ஒரு மனித பேரவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது;நிகழ போகிறது என்று சொன்னோம்; இப்பொழுது நிகழ்கிறது என்று சொல்கிறோம். சர்வதேசமும் ஐநாவும் நிகழ்ந்து முடிந்துவிட்டது என்ற செய்தியை எதிர் பார்த்து கொண்டா இருக்கிறது என்று கேள்வி எழுப்புகிறார் எமது செய்தியாளர்;அத்துடன் உலக தமிழ் மக்களை உடனடியாக இதனை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வருமாறு எமது செய்தியாளரிடம் பேசிய மக்கள் கதறுகின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.