யேர்மனியில் 7வது நாளாகத் தொடரும் பட்டினிப்போராட்டம் ஆயிரக்கணக்கான மக்கள் எழுச்சியுடன் பங்கேற்பு

_dsc9692யேர்மனி டுசில்டோவ் மாநிலப்பாராளுமன்றம் முன்பாக ராகுல்,கிரி ஆகியோரால் இன்று 7வது நாளாக பட்டினிப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.உடனடிப் போர்நிறுத்தம் மற்றும் யுத்தம் நடைபெறும் பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்படவேண்டும் போன்ற ,கோரிக்கைகளை முன் வைத்து இவ்விரு இளைஞர்களால் தொடக்கப்பட்ட பட்டினிப்போராட்டத்தின் 7ம் நாளான இன்றைய தினம் தமிழாலயா மாணவர்கள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினிப்போராட்டம் நடைபெறும் திடலில் இன்று காலையில் இருந்து ஒன்று கூடி கிரி,ராகுல் ஆகியோருக்கு தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

ஒன்று கூடியமக்கள் மதியம் 3மணியில் இருந்து மனிதச்சங்கிலி போராட்டமாக முன்னெடுத்து வருகின்றனர். பட்டினிப்போராட்டம் நடைபெறும் பந்தலுக்கு முன்பாகவுள்ள ஆற்றங்கரையோரமாக 3 கிலோமீற்றர் தூரத்திற்கு கைகளைக் கோர்த்து மனிதச்சங்கிலி வடிவில் நின்று சிறீலங்காப்படைகள் நிகழ்த்திவரும் இனப்படுகொலைக்கு சாட்சியாக விளங்கும் நிழல்படங்கள் அடங்கிய பாததைகளையும்,தமிழீழத் தேசியக்கொடிகளைத் தாங்கியவாறும் மனிதச்சங்கிலிப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

யேர்மன் மொழியில் ஆனா துண்டுப்பிரசுரமும் யேர்மனிய மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. ராகுல்,கிரி ஆகியோருக்கு ஆதரவாக பொதுமக்களும் அடையாள உண்ணாவிரதத்தை முன்னெடுத்து வருகின்றனர். மாலை 6மணியளவில் தாயகத்தில் படுகொலைசெய்யப்பட்ட மக்களுக்கான கைகளில் மெழுகுவர்த்தி தாங்கி தமது அஞ்சலிகளைத் தெரிவித்தனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.