இலங்கைக்கு பிரிட்டன் ஆயுத உதவி

இலங்கையில் அரசு படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் நடந்துவரும் தற்போதைய சூழலில், இலங்கை அரசுக்கு பல லட்சம் பவுண்டுகள் பெருமதி கொண்ட இராணுவ தளபாடங்களை விற்கும் ஒப்பந்தம் ஒன்றுக்கு பிரிட்டிஷ் அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக பிபிசிக்கு அறியக் கிடைத்துள்ளது.

கனரக இயந்திரத் துப்பாக்கிகள், இராணுவ விமானங்களுக்கான தொலைதொடர்புக் கருவிகள் மற்றும் ஹெலிகாப்டர் உதிரி பாகங்கள் ஆகியவை விற்பனை ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள பொருட்களில் அடங்கும்.

இலங்கைக்கு ஆயுதம் விற்பதில் பிரிட்டிஷ் அரசு தனது கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வெளியுறவு விசேடக் குழுவின் தலைவரான தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மைக் கேப்ஸ் கோரியுள்ளார்.

பிரிட்டன் விற்கிற ஆயுதங்கள் இலங்கையின் வட பகுதியில் நடந்துவரும் மோதல்களில் பயன்படுத்தப்பட்டால் அது பிரிட்டிஷ் அரசின் வழிகாட்டு விதிகளை மீறுவதாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.