லண்டனில் நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 25 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!

தியக தீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் 25 ஆம் ஆண்டை முன்னிட்டு நினைவு வணக்க நிகழ்வு லண்டனில் நடைபெற்றது.1987 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 15 ஆம் திகதி லெப்ரினன் கேணல் திலீபன், ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்து 12 நாட்களாக அவர் நடாத்திய தியாகப் பயணத்தின் மூன்றாம் நாளான நேற்று அவருக்கான வணக்க நிகழ்வுகள் லண்டன் ஈஸ்ட்காம் பகுதியில் உள்ள ட்றினிட்றி சென்ரரில் நடைபெற்றது.

தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த வணக்க நிகழ்வு மாலை 7:00 மணி முதல் மாலை 9:00 மணி வரை இடம்பெற்றது.இந்த நிகழ்வில் பொதுச்சுடரினை சிவா ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

ஈகச்சுடரினை ஆறுமுகம், நாதன் ஆகியோர் ஏற்றிவைத்தனர். தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் திருவுருவப் படத்திற்கான மலர்மாலையை செல்லப்பா அணிவித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் மலர் வணக்கம் செலுத்தினர்.நிகழ்வில் தலைமை உரையினை மரியதாசும், திலீபன் நினைவு சுமந்த நினைவுரையினை மாறனும், நன்றி உரியினை முருகானந்தமும் வழங்கியிருந்தனர்.

இந்த நிகழ்வில் நேற்றைய தினம் அதிகாலை மகிந்த ராஜபக்சவின் இந்திய வருகையை தடுத்து நிறுத்தக்கோரி தீக்குழித்த தாய்த் தமிழக உறவான விஜயராஜின் உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர்.

Copyright © 2004 - 2013 நெருடல். All rights reserved.