கனடா தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வெளியிட்ட அறிக்கை

thamil-padaippalikal-kalakamமே 10, 2009
ரொறன்ரோ, கனடா

பெரியார் திராடவிடர் கழகத்தக்கு எதிரான அடக்குமுறையையும் ஒடுக்குமுறையையும் கைவிட்டுத் தேர்தலை சனநாயக நெறிமுறைகளுக்கு அமைய எதிர்கொள்ளுமாறு  முதல்வர் கருணாநிதியை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழீழத்தில் தமிழ்மக்கள் சிங்களப் படையின் ஈவு, இரக்கமற்ற வான், தரைவழிக் குண்டுத் தாக்குதலால் மிகப் பெரிய உயிர் அழிவுகளை நாளும் பொழுதும் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். நாளாந்தம் நூற்றுக் கணக்கான தமிழ் ஆண், பெண், குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள்.

இந்த இனப் படுகொலைக்குத் துணை போகும் காங்கிரஸ் கட்சியியை எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தோற்கடிக்கும் முழக்கத்தை முன்வைத்து பெரியார் திராவிடர் கழகம் நடத்தி வரும் பரப்புரையை முடக்குவதற்கும் அடக்குவதற்கும் தமிழக காவல்துறை கையாண்டு வரும் நடவடிக்கைகள் எல்லை கடந்து செல்கிறது.

தேர்தல் பரப்புரைக்குக் பயன்படுத்தப்படும் குறுந்தகடுகள், துண்டறிக்கைகள் வைத்திருந்த பெரியார் கழகத் தொண்டர்கள் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார்கள். பரப்புரை வண்டிகள் காவல்துறையால் பறிமுதல் செய்யப்படுகின்றன.
தமிழினத் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் கலைஞர் கருணாநிதியின் அரசு காவல்துறை மூலம் கட்டவுழ்த்து விட்டிருக்கும் இந்த அடக்குமுறையை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஒரு சனநாயக நாட்டில் பேச்சுச் சுதந்திரம் மிகவும் முக்கியமானது. அதுவும் தேர்தல் காலத்தில் அது மிக மிக முக்கியமானது.

தோல்வி பயத்தில் துவண்டு போயிருக்கும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தமிழ் உணர்வாளர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பதன் மூலமும் அவர்களது பரப்புரையை முடக்குவதன் மூலமும் தேர்தல் முடிவை மாற்ற முடியும் எனக் கனவு காண்கிறது.

ஒரு காலத்தில் இப்படியான அடக்குமுறையையும் ஒடுக்குமுறையையும் சந்தித்த திராவிட முன்னேற்றக் கழகமே அதே அடக்குமுறையையும் ஒடுக்குமுறையையும் பெரியார் கழகத்துக்கு எதிராகக் கையாள்வதை வரலாறு மன்னிக்காது.

பெரியார் திராடவிடர் கழகத்தக்கு எதிரான அடக்குமுறையையும் ஒடுக்குமுறையையும் கைவிட்டுத் தேர்தலை சனநாயக நெறிமுறைகளுக்கு அமைய எதிர்கொள்ளுமாறு திமுக தலைவர் முதல்வர் கருணாநிதியை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.