யேர்மனியில் 8வது நாளாகத் தொடரும் பட்டினிப்போராட்டம்

_dsc9995யேர்மனி டுசில்டோவ் மாநிலப்பாராளுமன்றம் முன்பாக ராகுல்,கிரி ஆகியோரால் இன்று 8வது நாளாக பட்டினிப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

உடனடிப் போர்நிறுத்தம் மற்றும் யுத்தம் நடைபெறும் பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்படவேண்டும் போன்ற ,கோரிக்கைகளை முன் வைத்து இவ்விரு இளைஞர்களால் தொடக்கப்பட்ட பட்டினிப்போராட்டத்தின் 8ம் நாளான இன்றைய தினம் எஸ் ஜே இம்மானுவெல் அடிகளார் அவர்களும் கலந்துகொண்டு தமது ஆதரவையும் ஆசியையும் தெரிவித்தார்.

தமிழாலயா மாணவர்கள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினிப்போராட்டம் நடைபெறும் திடலில் இன்று காலையில் இருந்து ஒன்று கூடி கிரி,ராகுல் ஆகியோருக்கு தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.