1200 பேர் இறந்ததாகவும் 850 பேருக்கு மேல் காயமடைந்ததாக அறியப்படுகிறது

v2முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் கூடாரங்களில் உறங்கிக்கொண்டிருந்த வேளை திடீரென இராணுவத்தினர் நடத்திய குண்டு மழைத் தாக்குதலில் இதுவரை சுமார் 1200 கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 850 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் கடும் சமர் மூண்டுள்ள நிலையில், மக்கள் செறிவாக வாழும் பகுதிகளை நோக்கி இராணுவம் கடும் எறிகணைத் தாக்குதல்களை நடத்துவதாக கூறப்படுகிறது. முள்ளிவாய்கால் தெற்குபகுதியூடாக முன்னேற முயற்சிக்கும் இராணுவத்தினரை எதிர்த்து புலிகள் கடும் தாக்குதல் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இராணுவத்தினர் வெள்ளமுள்ளிவாய்கால் பகுதியில் தரையிறக்கம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் அதிலிருந்து நகரும் படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பல சிறுவர்களும் முதியோர்களும் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்துவரும் தகவல் தெரிவிக்கின்றது.

அங்கு ஒரு இனம் சத்தம் ஏதுமின்றி அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்?? உறவுகளே உடனடியாக உங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களை தொடர்புகொள்ளுங்கள் இனியும் தாமதித்தால் முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் பகுதி ஒரு மனிதப் புதைகுழியாக மாறி இலங்கை வரைபடத்தில் இருந்தே அகற்றப்படும் நிலை தோன்றலாம், அங்கு என்ன நடந்தது எவ்வாறு எஞ்சிய மக்கள் கொல்லப்பட்டனர், என்ற வரலாறு நமக்கு தெரியாமல் போகலாம்.

அங்கு என்ன குண்டுகள் பாவிக்கப்படுகின்றன என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. சிறுவர்களும் குழந்தைகளும் மற்றும் வயோதிபர்களும் அங்கு ஓடமுடியாத நிலையில் முடக்கப்பட்டுள்ளனர். எனவே விரைந்து செயல்படுங்கள் எம் உறவுகளே .. உங்களால் ஆன உதவியை செய்யுங்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.