இராசையா இளந்திரையன் ஷெல் வீச்சில் படுகாயம்

ilanthirayanதமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் என்று அழைக்கப்படும் இராசையா புனிதரூபன் அவர்கள் இன்று அதிகாலை இலங்கை இராணுவத்தின் கடும் ஷெல் வீச்சில் படுகாயம் அடைந்துதுள்ளார் என அறியப்படுகிறது.

நீண்டகால இடைவெளிக்கு பின் இளந்திரையன் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேற்று சனிக்கிழமை செவ்வி ஒன்றை வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சிறீலங்கா படையினரின் பாதுகாப்பு வலய மக்கள் பகுதி மீது நடாத்தப்படும் கடுமையான எறிகணைத்தாக்குதல்கள் தொடர்பிலும் ஐநாவின் பயிற்சி மற்றும் ஆய்வுகளுக்கான மையத்தின் செய்மதி படங்களை ஆதாரம்காட்டி கருத்து தெரிவித்திருந்தார்.

விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் கடந்த வாரம் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தரையிறக்க முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் இதில் எட்டு இராணுவக்கலங்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இம் முயற்சி கடற்புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

விடுதலைப்புலிகளின் வலிந்து தாக்கும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் தற்பொழுது வலிந்த தாக்குதலை தற்காத்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தலைமைத்துவத்தால் வலிந்து தாக்குதற்குரிய தள மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.