இலங்கையில் அப்பாவித் தமிழர்களின் நிலைமை நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது – ஐநா சபையின் நிபுணர்குழு

un_flagஐநா நிபுணர்கள் ஆனந்த் குரோவர், பிலிப் ஆல்ஸ்டன் உள்ளிட்டோர் இன்று நியூயார்க்கில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் நடைபெற்றுவரும் இனப்படுகொலை குறித்தும், அங்கு தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் சர்வதேச அளவில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அங்கு தற்போது மனிதாபிமானமற்ற போக்கு நிலவிவருவதாகவும், சண்டையில் இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும், உண்மை நிலவரம் பற்றி இலங்கை அரசு இதுவரை எதுவும் தெரிவிக்காமல் மௌனம் காத்துவருவது கவலையளிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் பாதித்த பகுதியில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை என்றும், போர்முனைக்கு பத்திரிகையாளர்கள் மற்றும் மனிதாபிமான குழுக்களை அனுமதிக்க தொடர்ந்து அந்நாட்டு அரசு மறுத்துவருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மனித உரிமை சட்டத்திற்கேற்ப, மனிதாபிமான அடிப்படையிலான பணிகள் போர்ப்பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்டுவருவதை உலகநாடுகளுக்கு நிரூபிக்கவேண்டியது இலங்கை அரசின் கடமை என்றும் ஐநா நிபுணர்கள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.