பாதுகாப்பு வலய பகுதி மீது தாக்குதல் நடத்தினால் கடும் பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டியேற்படும் ‐ மைக் ஒவன்ஸ் அச்சுறுத்தல் ‐ சிறீலங்கா கடும் எதிர்ப்பு

usa-flagபாதுகாப்பு வலய பகுதி மீது இலங்கை படையினர் தாக்குதல் நடத்தினால், கடும் பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டியேற்படும் என அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் மைக் ஒவன்ஸ் விடுத்துள்ள அச்சுறுத்தல் குறித்து, இலங்கை அரசாங்கம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

மைக் ஒவன்ஸ் இலங்கையின் பொதுமக்கள் பற்றி குறிப்பிடும் போது, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரின் தாக்குதலில் 100 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் அமெரிக்க இந்த விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிப்பதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிகாரிக்கு இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட எந்த உரிமையுமில்லை என அரசாங்கத்தின் அந்த பேச்சாளர் கூறியுள்ளார். இதேவேளை விடுதலைப்புலிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துமாறு அமெரிக்கா விடுத்த வேண்டுகோளையும் அரசாங்கம் நிராகரித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.