திமுக ஆட்சியில் இருந்தபோது இலங்கைத் தமிழர் பிரச்சினையில் எதுவும் நடக்கவில்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு

e0aeb0e0aebee0aeaee0aea4e0aebee0aeb8e0af8dதிமுக ஆட்சியில் இருந்தபோதெல்லாம் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக எதுவும் செய்யவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.  இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

திமுக ஆட்சியில் இருந்தபோதெல்லாம் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக எதுவும் செய்யவில்லை. 1977 முதல் 1987 வரை எம்.ஜி.ஆர். ஆட்சியில் திமுக இலங்கைத் தமிழர்களுக்காக தடையை மீறி ஊர்வலம், முழு அடைப்பு, தொடர் மறியல், மனிதச் சங்கிலி, கண்டனப் பேரணி என்று பல்வேறு போராட்டங்களை நடத்தியது.

1989 வரை 1991 வரை திமுக ஆட்சியில் இருந்தது. அந்த 2 ஆண்டு காலத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக திமுக எந்தப் போராட்டத்திலும் ஈடுபடவில்லை. ஒரு கண்டன பொதுக்கூட்டத்தைக் கூட நடத்தவில்லை. சில சந்திப்புகள் மட்டுமே நடந்துள்ளன.

திமுகவின் போராட்டப் பட்டியல் 1991-க்கு பிறகு மீண்டும் தொடங்குகிறது. 1995-ல் இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக திமுக முழு அடைப்பை நடத்தியது. அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது. திமுக எதிர்க்கட்சியாக இருந்த போதெல்லாம் இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக போராட்டங்களை நடத்தியுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த போதெல்லாம் இலங்கைத் தமிழர் நலன்களை கைவிட்டிருக்கிறது. இன்றும் அதுதான் நடந்து வருகிறது.

இதை நான் சொன்னால், ராமதாஸ் பிளவை உண்டாக்கப் பார்க்கிறார், தன் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளப் பார்க்கிறார் என்று கருணாநிதி ஆத்திரப்படுகிறார்.

எல்லோரும் இணைந்து போராடும்போது ஆபத்து என்று அச்சப்பட தேவையில்லை. ஆட்சி பற்றிய கவலையை விட்டுவிட்டு முதல்வர் துணிவுடன் செயல்பட்டு ஆட்சியை இழக்க நேரிட்டாலும் அடுத்த வரும் தேர்தலில் திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழக மக்களின் நாடித் துடிப்பு இதுதான். இதை மனதில் வைத்துக் கொண்டு முதல்வர் கருணாநிதி செயல்பட வேண்டும். இதற்கு மாறாகச் செயல்பட்டால் அதனால் ஏற்படும் அரசியல் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.