யேர்மன் பசுமைக்கட்சி மாநாட்டில் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களுக்கெதிராக தீர்மானம்

img_1613பேர்லினில் நடைபெற்ற பசுமைக்கட்சியின் மாநாட்டில் யேர்மனியில் உள்ள கெம்பன் நகர பிரதிநிதியான இலங்கைத் தமிழர் திரு ஜெயரட்னம் கனிசியஸ் கலந்துக்கொண்டு, சிறிலங்கா அரசின் தமிழருக்கெதிரான மனித உரிமை மீறல்கள் பற்றி பேசுகையில், சிறிலங்காவில் தமிழ் இனப் பேரழிவு நடைப்பெற்றுக்கொண்டு இருப்பதாகவும், இதனை வெளியுலகம் அறிந்துக்கொள்ளாதிருப்பதாக, ஊடகவியளாளர்கள் சுதந்திரமாக சென்று செயல்படுவதை சிறிலங்க அரசு நிறுத்தி உள்ளதையும் அறிவித்தார்.

சர்வதேச நாடுகள் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் எனக் கோரியபோதும், அதனையும் சிறிலங்கா அரசு மறுத்துள்ளது எனக் கூறியவர் சிறிலங்காவில் நடைபெறும் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரி அவசரவிண்ணப்பம் கொடுத்தபோது அதனைப் பெரும்பாண்மையான பசுமைக்கட்சியின் பிரதிநிதிகள் அங்கிகரித்தார்கள்.

அவர் மேலும் தொடர்கையில் சிறுப்பாண்மை இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரிப்பது என்பது பசுமைகட்சியின் கொள்கையில் ஒன்றாகும். எனவே சிறுப்பாண்மை தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையையும் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து இவ் மாநாட்டில் கலந்துக்கொண்ட பிரதிநிதிகள் தமிழ் இளையோர்களை சந்தித்து அவர்களது சிறிலங்கா அரசுக்கு எதிரான போராட்டங்கள் பற்றியும், உண்ணாவிரத போராட்டம் பற்றியும் சிறிலங்காவில் தற்போது நடைபெறும் நிலைமைகளையும் கேட்டறிந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.