யுத்த குற்றத்தில் ஈடுபட்டுவரும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்கு தொடரப்படவேண்டும்: PUCL

இலங்கையின் வடக்கு பகுதியில் கொடூரமான யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக ஐ. நா. பாதுகாப்புச் சபை வழக்குத் தொடர வேண்டுமென முக்கிய இந்திய மனித உரிமை அமைப்புக்களில் ஒன்றான குடியுரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்று வரும் இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் உடனடியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அப்பாவி பொதுமக்கள் நிலைகள் மீது இலங்கை அரசாங்கம் வான் மற்றும் ஆட்டிலறி தாக்குதல்களை நடத்தியமைக்கான அனேக சான்றுகள் இருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், கடத்தல்கள், ஊடக அடக்குமுறை, கப்பம் கோரல் உள்ளிட்ட பல்வேறுபட்ட மனித உரிமை மீறல்களையும் இலங்கை அரசாங்கமும் அதன் ஆதரவு அமைப்புக்களும் நாட்டில் கட்டவிழ்த்து விட்டுள்ளதாக சிவில் உரிமைகளுக்கான மக்கள் கழகம் தெரிவித்துள்ளது.

வன்னியில் பல்வேறு துயரங்களை எதிர்நோக்கி வரும் தமிழ் பொதுமக்களை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் அமைப்பு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென குறித்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இலங்கையின் மனிதத்துயரைத் தடுத்து நிறுத்தும் வகையில் தலையீடு செய்வதில் இந்தியா தோல்வியடைந்துள்ளது என தெரிவித்துள்ளது.

குண்டு வீச்சினாலும் பட்டினியாலும், போதிய மருத்துவ வசதிகளும் இன்றி மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக ஐநா இராணுவத் தலையீடு ஒன்று அவசியம் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.