பிரேசில் களியாட்ட விடுதியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு!

brazilfire1பிரேசிலில்  களியாட்ட விடுதியொன்றில் உரிழந்தோரின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது.நேற்று இடம்பெற்ற இச்சம்பவமானது பிரேசில் நாட்டில் இடம்பெற்ற மிகமோசமானதாகக் கருதப்படுகின்றது.விபத்துக்கான காரணம் உறுதியாக தெரியவராத போதிலும்  விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாண வேடிக்கை நிகழ்வே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

 

http://nerudal.com/images/2013/01/brazilwfire2.jpg

தீ விபத்து ஏற்பட்டவுடன் பலர் அங்கிருந்து ஓட முயற்சித்த போதும் அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் அவர்களை வெளியே விட வில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

http://nerudal.com/images/2013/01/brazilfire3.jpg

மேலும் பலர் வெளியே செல்லும் வழிக்கான குறியீட்டையும், கழிவறைகளுக்கான குறியீட்டையும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.  வெளியே செல்வதற்கு பதிலாக கழிவறைக்குள் சென்றுள்ளனர். இதனால் சுமார் 50 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவத்தின் போது சுமார் 2000 பேர் விடுதியில் இருந்துள்ளனர். அவர்களில் அநேகமானோர் மாணவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

http://nerudal.com/images/2013/01/brazilfire4.jpg

கூட்டத்தில் சிக்கியும், மூச்சுத் திணறியுமே பலர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த களியாட்ட விடுதி சட்டவிரோதமாக இயங்கியதொன்றெனவும் அங்கு சரியான பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படவில்லையெனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

http://nerudal.com/images/2013/01/brazilfire5.jpg

Copyright © 2004 - 2013 நெருடல். All rights reserved.