மனித மூளை சூப்ப கொம்பியூற்றரில்
- உலக புதினங்கள்| 29. 01. 2013, செவ்வாய்க்கிழமை, தமிழீழ நேரம் 21:02
ஐரோப்பிய ஒன்றியம் மனித மூளையை சூப்ப கொம்பியூற்றரில் வடிவமைக்கும் புதிய ஆய்வுகளுக்காக ஒரு பில்லியன் யூரோவை ஒதுக்கீடு செய்துள்ளது.
மனித மூளை என்னும் அற்புதமான படைப்பை கண்டறிந்து அதை அபார சக்தி கொண்ட சூப்ப கொம்பியூற்றரில் இணைத்து மூளையின் செயற்பாடுகளை கண்டறிய இந்த ஆய்வு முயற்சிக்கும்.
மூளையின் பரிபூரண செயற்பாட்டை அறியும் முயற்சியில் மனிதனுக்கு சவாலாக இருக்கும் இருளான பகுதிகளில் இது ஒளியடிக்கும்.
இதற்காக ஆறு பிரிவுகளாக வேலைத்திட்டங்கள் நடாத்தப்பட இருக்கின்றன, ஐரோப்பாவின் மிகப்பெரிய ஆய்வுப் பணியில் மூளை, நரம்பியல் நிபுணர்கள் பலர் பங்கேற்கவுள்ளனர்.
எப்படி மூளை செயற்படுகிறது, மூளையின் தகவல்கள் எங்கு சேமிக்கப்படுகிறது என்பதை கண்டறிந்து கணினியில் வடிவமைத்து, மனித மூளையை அதனுடன் ஒப்பிட்டு கண்டறிய புது வழி பிறக்கப்போகிறது.
மேலும் மூளையில் ஏற்படும் சுகயீனங்கள் அதற்காக வழங்கப்படும் மருந்துகளினால் உரிய பயன் கிடைக்கிறதா அவை சரியான மருந்துகள்தானா என்பதையும் கண்டறிய முடியும்.
இது மனித வாழ்வுக்கும், வைத்தியத்துறைக்கும் கிடைக்கவுள்ள அரும்பெரும் வரப்பிரசாதமாகும், இதன் மூலம் ஒவ்வொரு மூளையின் தனிப்பட்ட பண்புகளையும், ஆற்றலையும் வரைபடமாக வரைந்தும் எடுக்க முடியும், அந்த வரைபடத்தை இன்னொரு கணினிக்கு வழங்கி மற்றைய சிகிச்சைகளையும், ஆய்வுகளையும் செய்ய முடியும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 15 பல்கலைக்கழக நிபுணர்களும், வேறு பல தனியார் துறை நிபுணர்களும் இந்த ஆய்வில் பங்கேற்கவுள்ளனர்.

