அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய் – பேரணி முழக்கம்

இலங்கை தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஈழ பிரச்சனையை முன்வைத்து கருப்பு கொடி பேரணி நடத்துகின்றனர். புதுக்கோட்டை நகரில் சி.பி.ஐ மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமையில் கருப்பு கொடி பேரணி ஆரம்பமானது.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணி கீழ ராஜவீதி வழியாக 3 கி.மீ தூரத்திலுள்ள திலகர் திடலுக்கு போனது.

பேரணியில், இந்தியாவே கொடுமையான ஆட்சி நடத்தும் இலங்கை சிங்கள அரசுக்கு ஆயுதங்கள் வழங்குவதை உடனே நிறுத்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் தீக்குளித்தும் காங்கிரஸ் தலைவர்களுக்கு பதவி ஆசை பிடித்து இலங்கை விவகாரத்தை பார்க்கிறார்கள் என்றவர்கள்.

இலங்கையில் அமைச்சராகயிருந்துக்கொண்டு சிங்கள கொடுமைக்கார அரசுக்கு சாதகமாகயிருந்துக்கொண்டு தமிழர்களை அழிக்க துணை போகும் டக்ளஸ் தேவானந்தா மீது தமிழகத்தில் கொலை வழக்குவுள்ளது. அவரை கைது செய்து ராஜபக்சே உடனே தமிழகத்திடம் ஒப்படைக்க வேண்டும். டக்ளஸ் தேவானந்தாவை தமிழகம் கொண்டு வந்து விசாரிக்க காவல்துறை களமிறங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இப்பேரணியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.