ரத்தம், உடல் உலகின் முதல் செயற்கை மனிதன்

indexரத்தம் மற்றும் செயற்கை உறுப்புகளுடன் செயற்கை மனிதன் உருவாக்கப்பட்டுள்ளான்.உலகில் மனிதன் எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கினான். ஆனால், மனிதனை கடவுளால் மட்டுமே படைக்க முடியும் என்ற நியதியையும் மாற்றி, செயற்கை மனிதனையும் தயாரித்து சாதனை படைத்து இருக்கிறான்.

இங்கிலாந்தில் உள்ள 18 நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக நிபுணர்கள் இணைந்து செயற்கை மனிதனை படைத்துள்ளனர். ரத்தம், சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், கை, கால், கண்கள் போன்றை அனைத்தும் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டது.கண்கள், இதயம், நுரை யீரல்கள் போன்ற உறுப்புகள் கம்ப்யூட்டர் சிப்களுடன் இணைக்கப்பட்டு இதன்மூலம் அவை இயக்கப்படுகின்றன.

இந்த செயற்கை மனிதனை உருவாக்க ரூ.5 1/2 கோடி செலவிடப்பட்டுள்ளது. இவன் லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கிறான். வருகிற மார்ச் 11-ந்தேதி வரை அவனை பொதுமக்கள் பார்த்து மகிழலாம்.செயற்கை மனிதனின் சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திலும், செயற்கை நுரையீரல்கள், ஸ்வாசீன் பல்கலைக்கழகத்திலும் உருவாக்கப்பட்டவை.

Copyright © 2004 - 2013 நெருடல். All rights reserved.