செய்த பாவத்தை போக்க கங்கையில் புனித நீராடினார் நித்தியானந்தா

nithiyanandaகும்பமேளாவில் கலந்து கொண்ட சுவாமி நித்தியானந்தா, மூன்று ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

அலகாபாத் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து வருகிறது.

இன்று அங்கு புனித நீராடுவதற்காக 3 கோடி மக்கள் குவிந்துள்ளனர். பெரும் திரளான சாதுக்கள், பிரபலமான சாமியார்கள் உள்பட பல தரப்பினரும் குவிந்துள்ளனர்.

அதேபோல சாமியார் நித்தியானந்தாவும் அங்கு தனது ஆதரவாளர்கள் சகிதம் முகாமிட்டிருந்தார்.

இன்று நித்தியானந்தா கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய புனித ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

மெளனி அமாவாசையையொட்டி இந்த புனித நீராடல் நடைபெற்றது. மகா கும்பமேளாவின் முக்கிய நிகழ்ச்சி இந்த புனித நீராடல் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்த பாவமெல்லாம் போய் விடும் இன்று புனித நீராடுவது மகா கும்பமேளாவில் மிக முக்கியமாக கருதப்படுகிறது.

Copyright © 2004 - 2013 நெருடல். All rights reserved.