இந்திய உளவுப் பிரிவு தலைவருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் பேச்சுவார்த்தை
- இந்தியச் செய்திகள், தாயக, இலங்கைச் செய்திகள்| 12. 02. 2013, செவ்வாய்க்கிழமை, தமிழீழ நேரம் 2:02
இந்திய உளவுப் பிரிவான றோவின் தலைவர் அலோக் ஜோசிக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் மத வழிபாட்டு நோக்கத்திற்காக ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது, இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு சுமார் அரை மணித்தியாலம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, என்ன விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் போது இந்திய அரசாங்க உயர் அதிகாரிகளையோ அல்லது வேறும் அரசியல்வாதிகளையோ சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி :குளோபல் நியூஸ்.

