இந்தியச் செய்தி கும்பமேளாவில் புனித நீராட சுவாமி நித்தியானந்தாவுடன் ரஞ்சிதா வந்தாரா?

nithiyananda ranjithaகும்பமேளாவில் புனித நீராடுவதற்காக ஏராளமான ஆண், பெண் சீடர்களுடன் சுவாமி நித்தியானந்தா சென்றிருந்தார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த மகா கும்பமேளாவில் 3 கோடி பக்தர்கள் கூடி புனித நீராடியதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் உள்ள பிரபல சாமியார்கள் கும்பமேளாவிற்கு வந்தாலும் நித்தி வந்த விதமே தனி ரகமென தகவல் வெளியாகியிருக்கிறது.

பாதுகாவலுக்கு கொமொண்டோக்களுடன் சென்றிருந்த நித்தியானந்தா, வெள்ளி தேரில் ஏறி கங்கை நதிக்கரைக்கு சென்று புனித நீராடினாராம். அப்போது நான் கடவுள் படத்தில் இடம் பெற்ற ஓம் சிவஹோம் என்ற பாடல் ஒலிக்கப்பட்டதாம். மேலும் அப்போது ஜெயேந்திரர் சாமியை சந்தித்து பேசியுள்ளார் நித்தியானந்தா.

ஏராளமான பெண் பக்தர்கள் இவருடன் வந்தாலும் நடிகை ரஞ்சிதா உடன் வந்தாரா? என்பது பற்றிய தகவல் வெளியே வரவில்லை.

Copyright © 2004 - 2013 நெருடல். All rights reserved.