பிரபாகரனை முறியடித்தது போன்று சர்வதேச அழுத்தங்களுக்கும் முகம்கொடுக்க வேண்டுமாம் -குணதாச அமரசேகர
- தாயக, இலங்கைச் செய்திகள்| 17. 02. 2013, ஞாயிற்றுக்கிழமை, தமிழீழ நேரம் 4:43
சர்வதேச ரீதியாக முன்வைக்கப்படும் எந்தவொரு அழுத்தங்களுக்கும் அச்சமடையாமல் இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் அமர்வில் கலந்து கொண்டு செயற்படவேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவ்இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், நவநீதம்பிள்ளையின் யோசனை அறிக்கையை சர்வதேச மன்னிப்பு சபை ஆதரிக்கின்றமை பிரமி;க்கத்தக்க விடயம் அல்ல.
ஏனென்றால் அவர்கள் இருதரப்பும் ஒன்றாகத்தான் செயற்படுகிறார்கள். திருடனின் அம்மாவிடம் குறி சோதிடம் பார்ப்பது போன்ற விடயம்தான் இது. அவர்களின் செயற்பாடுகளை நிராகரித்து விட்டு அரசாங்கம் பயமின்றி செயற்படவேண்டும்.
அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை முறியடித்தது போன்று இதற்கும் முகம்கொடுக்க வேண்டும். பொய்யான அச்சுறுத்தல்களால் எங்களை அச்சமடைய செய்கிறார்கள்.

