ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு பிரித்தானியா கடும் அதிர்ச்சி

alistair-burt-170510பிரித்தானியக் குடியுரிமை பெற்ற சண்டேலீடர் வாரஇதழின் புலனாய்வு ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு பிரித்தானியா கடும் அதிர்ச்சி மற்றும் கவலை தெரிவித்துள்ளது.

இது குறித்து பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக மற்றும் கொமன்வெல்த் விவகார அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட், கடும் அதிர்ச்சியும், ஆழ்ந்த கவலையும் வெளியிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும், சாத்தியமான எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வதாகவும், அலிஸ்ரெயர் பேர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதேவேளை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் இணைந்து நாமும் பிரார்த்திக்கிறோம்.

எமது தூதரக அதிகாரிகள் மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்வையிட்டனர்.

தேவைப்பட்டால், அவருக்கு மேலதிக உதவிகளை வழங்கத் தயாராகவே உள்ளோம்.

ஊடகவியலாளர் என்பதனால் தான் அவர் மீது இந்தக் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

இலங்கை அதிகாரிகள் உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கு சாத்தியமான எல்லா நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கான பொறுப்பை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் கேட்டுக் கொள்வதாகவும், அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2013 நெருடல். All rights reserved.