வன்னியில் பெரும் மோதல் வெடித்துள்ளது -படையினருக்கு பாரிய இழப்பு:பல நூறு பொதுமக்கள் பலி

vanni23032விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கடைசி சூனியப் பிரதேசமான வட்டுவாகல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மோதல்கள்; இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. நேற்று மாலை  படைத்தரப்பு பெரும் முயற்சியின் மத்தியில் படைத்தரப்பு வட்டுவாகல் பகுதியைக் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் இன்று அதிகாலை 3மணியளவில் விடுதலைப் புலிகள் நடத்திய பதில் தாக்குதலில் வட்டுவாகல் விடுவிக்கப்பட்டது. ஆயினும் படைத்தரப்பு மீண்டும் காலை 5 மணியளவில் ஆரம்பித்த ராணுவ நடவடிக்கையின் பின்னர் 8 மணியளவில் வட்டுவாகலை படைத்தரப்பு மீண்டும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனிடைய வன்னியில் அனைத்துப் பகுதிகளிலும் அதாவது சூனியப் பிரதேசம் என அறிவிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளிலும் தொடர்ச்சியாக மோதல்கள் இடம்பெறுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கொழும்பிலும் அனுராதபுரத்திலும் அம்புலன்ஸ் வண்டிகள் தொடராக ஓடுகின்றன ‐ காயப்பட்ட படையினர் பெருமளவில் தெற்கு நோக்கி நகர்த்தப்படுகின்றனர்.
 
பாரிய குண்டுத் தாக்குதல்களும்  பல்குழல் எறிகணைத் தாக்குதல்களும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் இதுவரை குறிப்பிட்ட இலக்குகளில் 17 தடவைக்கும் மேற்பட்ட தடவைகள் விமானப்படை  விமானங்கள் பாரிய குண்டுத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருப்பதாகவும் கடற்பகுதிகளில் இருந்து கடற்படையினர் பல்குழல் பீரங்கிகளையும் கடற்படை கப்பல்களில் இருந்து மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
பொதுமக்கள் பாரிய அளவில் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. ஆனால் தகவல்கள் எவையுமே வெளியாகவில்லை.
 
இலங்கை பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ 48 மணி நேர கால அவகாசம் விடுத்துள்ள நிலையிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. 24 மணித்தியாலங்கள் தற்போது கடந்துள்ள போதிலும் அடுத்து வரும் 24 மணித்தியாலங்களில் எதுவும் இடம்பெறலாம் எனவும் எந்த வித மாற்றங்களும் இடம்பெறலாம் எனவும் அஞ்சப்படுகின்றது. ஆத்துடன் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள மோதல்களில் கணிசமான அளவு உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
 
மக்கள் அங்கிருந்து வெளியேற பாதுகாப்புத் தரப்பு பாதையொன்றை அமைத்து வழங்கும் எனப் பிரச்சாரம் செய்யப்பட்ட போதும் அவ்வாறான எந்தவித ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவி;ல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
 
இன்றும் பொதுமக்கள் சுற்றிவளைக்கப்பட்டு தாக்குதலுக்குள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

இதனிடையே கரையான்மலை ஊடாக கடற்கரைப் பகுதியில் தரையிறங்க முற்பட்ட கடற்படையினர் மீது கரும்புலிகளது 4 தற்கொலைப்படகுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதில் படைத்தரப்பு பலத்த சேதங்களைச் சந்தி;த்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் படைத்தரப்பு தொடர்ந்தும் தனது முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக சில தகவல்கள்  தெரிவிக்கப்படும் அதேவேளை  சில தகவல்கள் கடற்பகுதியில் தரையிறங்கியுள்ளதாகவும் கூறுகின்றன. எனினும் சுயாதீனச் செய்திகள் எவையும் இதனை உறுதிப்படுத்தவில்லை.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.