வெள்ளைவானில் கடத்தப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் தடுத்துவைப்பு

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வெள்ளைவானில் கடத்தப்பட்ட வடபகுதி இளைஞர்கள் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

நேற்று முந்தினம் வெள்ளிக்கிழஅ அதிகாலை வேளை கொட்டாஞ்சேனை பகுதியில் வெள்ளைவானில் வந்த இராணுவ சீருடையணிந்த ஆயுததாரிகளினால் 35 அகவையுடைய நாகலிங்கம் பஞ்சலிங்கம் என்ற குடும்பஸ்த்தர் கடத்தப்பட்டுள்ளார்.

கரவெட்டியைச் சொந்த இடமாகக் கொண்டவர் கனடாவிலிருந்து மூன்று வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார். இது தொடர்பாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

வுனியா பூந்தோட்டத்தைச் சேர்ந்த 20 அகவையுடை பாலராஜ் ராம் பிரகாஸ் என்ற இளைஞரும் இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் கடத்தப்பட்ட  காமகோடிகா தாமோதர ஐயர், வீரசிங்கம் சுவர்ணநாதன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன்  சின்னையா சுதாகர், மரியதாசன் செல்வேந்திரன், சேகர் ரகுராஜ் ஆகிய மூவரும் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

இதேவேளை ஜனவரி முதலாம் திகதியிலிருந்து ஜனவரி 31ஆம் திகதியான ஒரு மாத்திற்குள் 29 பேர் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.