மலேசியாவில் இலங்கை தமிழர் தீக்குளித்து பலி

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி மலேசியாவில் இலங்கை தமிழர் ஒருவர் தீக்குளித்து பலியாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளன.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலிறுத்தி மலேசியாவில் இலங்கை தமிழ் வாலிபர் ராஜா (வயது27) என்பவர் தீக்குளித்து பலியானார். ராஜா தீக்குளித்த இடத்தில் பெரிய டைரி, பணப்பை, தீப்பெட்டி ஆகியவை கிடந்தது.

அந்த டைரியில் ராஜா உருக்கமான கடிதம் ஒன்றை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு எழுதி இருந்தார்.

அதில் இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம், உடனடி பேச்சு வார்த்தை மூலம் அப்பாவி தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ அமெரிக்காவின் புதிய அதிபர் ஓபாமா உடனே இலங்கை செல்ல வேண்டும்.

அவருடன் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், நார்வே சமாதான தூதர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் செல்லவேண்டும்.

இந்த கடிதத்தை வைகோவிடம் கொடுக்கவும்.

இதை எல்லாம் வைகோ நிறைவேற்ற வேண்டும் என்று எழுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.