இலங்கையில் ஒரு இனத்திற்கென்று ஒரு பகுதியை ஒதுக்க அரசாங்கம் தயார் இல்லை -ஜீ.எல் பீரிஸ்

peiris-uno-11இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த தேசிய அளவில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது வடமாகாணத்தில் 30 வீத இராணுவக் குறைப்பு என ஐக்கிய நாடுகள் சபையின் 25வது கூட்டத் தொடரில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்தார்

30வருட கால பயங்கரவாத சூழலில் இருந்து நாம் மீண்டு வளர்ந்து வரும் நாடு. காணாமல் போனவர்கள் குறித்து கணக்கிடப்படுகிறது.

அத்துடன் 1992ம் ஆண்டுக்குப் பின்னர் காணாமல் போனவர்கள் மற்றும் இறந்தவர்களின் முழுமையான தரவு இல்லை. அதற்கான முன்னெடுப்புக்களும் நடக்கிறது.

மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும்

யுத்தம் முடிந்து இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தேசிய செயற்திட்டம் என்ற பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் பிரேரணையையும் ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையையும் இலங்கை நிராகரிப்பதாகவும்,

இலங்கையின் வடக்கு பகுதியில் இனபாகுப்பாடு ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிக்கவில்லை

அத்துடன் யுத்தத்திற்கு முன்னர் வடக்கில் 75,000 முஸ்லிம்களும் 35,000 சிங்களவர்களும் வாழ்ந்ததாகவும் தற்போது கொழும்பில் சிங்களவர்கள் அல்லாத 35வீத மக்கள் வாழ்கின்றனர்.

இந்த நிலையில்  இலங்கையில் ஒரு இனத்திற்கென்று ஒரு பகுதியை ஒதுக்க அரசாங்கம் தயார் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் சிவில் நிர்வாகத்தில் இராணுவம் தலையீடு செய்யவில்லை. பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காததால் நல்லிணக்க முனைப்புகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மத ஸ்தலங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பு இல்லை அத்துடன் அரசாங்கம் அதனை ஒருபோதும் அனுமதிக்கவில்லை.

காணாமல் போனவர்கள் குறித்தும் இழப்பீடுகள் வழங்குவது குறித்தும் ஆணைக்குழு விசாரணை நடத்தி வருவதாகவும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளால் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதுடன் சிங்களவர்களுக்கும் பாதிப்பு உண்டு

நில அளவை தொடர்பிலும் ஏற்பாடுகள் உட்பட  பல பொருளாதார வளர்ச்சி குறித்து பிரஸ்தாபிப்புடன் வடக்கில் இன்று பளை வரை புகையிரதம் செல்கிறது.

நல்லிணக்கத்தை ஏற்படுத்த தேசிய அடையாள அட்டையில் மூன்று மொழி இணைக்கப்பட்டுள்ளது.

2009 இருந்து இன்று வரை 30 வீத இராணுவக் குறைப்பு நடைபெற்றுள்ளதுடன், பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவில்லை என்றும் குற்றஞ்சாட்டும் முறையில் ஐக்கிய நாடுகள் சபையின் 25வது கூட்டத் தொடரில் உரையாற்றிய இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.