ஜேர்மனியில் எதிர்வரும் வியாழக் கிழமை (21.5.2009) கவன ஈர்ப்பு ஊர்வலமும், கவன ஈர்ப்பு நிகழ்வும் நடைபெற உள்ளது

தமிழீழ தாயக உறவுகளே!

எதிர்வரும் வியாழக் கிழமை 21.5.2009 அன்று ஜேர்மனியில் உள்ள பிறேமன் நகரின் பிரதான புகையிரத நிலையம் முன்பாக கவன ஈர்ப்பு ஊர்வலமும், கவன ஈர்ப்பு நிகழ்வும் நடைபெற உள்ளது.

யேர்மனி பிறேமன் நகரிலே, எதிர்வரும் 21ம் திகதியில் இருந்து 24ம் திகதி வரை தேவலாய ஒன்றுகூடல் நிகழ்வு (Kirchen Tag) நடைபெற உள்ளது. இதன் பொருட்டு யேர்மனி தலைவர் திருமதி அஞ்சேலா மேர்கல் 21ம் திகதி பிறேமனுக்கு வருகை தருகிறார்.

ஊர்வலம் முற்பகல் 11 மணிக்கு பிறேமன் புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகி, பகையிரத நிலையத்தின் பின்புறம் யேர்மன் தலைவர் கலந்துகொள்ளும் நிகழ்விலே முடிவுற்று, தொடர்ந்து அங்கே கவன ஈர்ப்பு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

எனவே, இயலுமான யாபேரும் திரண்டு வந்து எங்கள் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் பிறேமன் மக்களுக்கும், யேர்மன் தலைவருக்கும், தேவாலய நிகழ்வுகளுக்காக பிறேமன் நகரிலே குழுமியிருக்கும் ஏனைய 3,50, 000 மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என உரிமையுடன் அழைக்கிறோம்.

ஊர்வலம் ஆரம்பமாகும் நேரத்திற்கு தாமதமாக வரும் மக்கள் புகையிரத நிலையத்தின் பின்புறம் வந்து, கவன ஈர்ப்பு நிகழ்வில் பங்குபெறலாம்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.