நியூசிலாந்தில் பல்கலைக்கழக மாணவன் உண்ணாநிலை போராட்டம்

சிங்கள பேரினவாத அட்டூழியத்தின் பிடியில் சிக்கித் தவித்திக்கொண்டிருக்கும் எம் தமிழ் உறவுகளின் உண்மை நிலையை சர்வதேச மக்களுக்கு தெரிவிக்குமுகமாக நியுசிலாந்து நாட்டு பிரஜையான திரு Stu Colquhoun என்னும் ஒக்கிலாந்து பல்கலைக்கழக மாணவர் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியிலிருந்து தனது உண்ணாநிலை போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

அரசியல் துறையில் கல்வி கற்றுவரும் இவர் Justice for Tamils Students Association (JTSA) என்ற ஒரு அமைப்பை உருவாக்கி தமிழ் மக்களுக்கான சம உரிமையை விரும்பும் மாணவர்களையும் ஒன்றிணைத்து தமிழர்களுக்கு நடைபெற்றுவரும் அவலங்களை எதிர்த்து பல்கலைக்கழக வளாகத்தில் இரவு பகல் பாராது தனது போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.

இப் போராட்டத்தில் முன்வைத்த கோரிக்கைகள்:

  1. அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்படவேண்டும்;
  2. தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி பொதுமக்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும்;
  3. அரச சார்பற்ற நிறுவனங்கள்இ ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகள் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவிகள் வழங்க அனுப்பப்படவேண்டும் மற்றும் முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் மக்களின் உண்மை நிலவரம் குறித்து அறிக்கைகள் வெளியிடப்படவேண்டும்;
  4. மற்றும் நியுசிலாந்து அரசாங்கம் சிறிலங்கா அரசுக்கு தொடர்ந்தும் பாரிய அழுத்தம் கொடுக்கவேண்டும்;

நியுசிலாந்து துடுப்பாட்ட குழு இன்னும் சில மாதங்களில் இலங்கைக்கு மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணத்தை தடைசெய்ய வேண்டி நியுசிலாந்து துடுப்பாட்ட சங்கத்திடம் கோர வேண்டும்.

JTSA பிரதிநியாக ஒக்கிலாந்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பிடம் (AUSA)மேற்கூறிய கோரிக்கைளை முன்வைத்து அக்கோரிக்கைள் நிறைவேற மாணவர் அமைப்பு நியுசிலாந்து அரசாங்கத்திடம் அழுத்தம் தெரிவிக்கப்பட வேண்டும் என்று திரு  Stu Colquhoun தனது உண்ணாநிலை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறார்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.