19-05-2009: டென்மார்க்கில் தொடர்ந்தேர்ச்சியான மாபெரும் கண்டனப் பேரணி

dsc02643டென்மார்க்கின் தலைநகர் கொப்பன்காபனில் நேற்றையதினம் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று அனைத்துத் தமிழர்கள் அமைப்புக்களால் நடாத்தப்பட்டது. வெளிநாட்டு அமைச்சின்முன் 300 தமிழ்மக்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பேரவலக் கவனயீர்ப்பப் போராட்டமானது மாலை 3.00 மணியளவில் தொடர்ந்து நடைபெற்றது.

அவ்வேளையில் கொழும்பு சென்றுவந்த வெளிநாட்டு அமைச்சின் பிரதிநிதி தமிழ் மக்களுடன் வந்து கலந்துரையாடினார். கொழும்பு விஜயத்தின்போது தம்மால் மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்கள் பற்றியும், தொடர்ந்து தாங்கள் சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து நடைமுறைப்படுத்த இருக்கின்ற திட்டங்கள் பற்றியும் விளக்கமளித்தார்.

இன்று டென்மார்க்வாழ் தமிழ்மக்கள் அங்குள்ள அமரிக்க தூதுவராலயத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்துகின்றனர். போராட்டத்தின் இறுதியில் 5 கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் தூதரகத்தில் கையளித்தனர் மகஜர் அளிப்பு நிகழ்வானது  13.00 மணியளவில் இடம்பெற்றது.

எதிர்வரும் வெள்ளியன்று டென்மார்க்கின் அனைத்து நகரங்களிலும் வாழும் தமிழ்மக்களால் பாரிய அளவிலான போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கான அறிவித்தல்கள் ஏற்கனவே தமிழ்மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும் மீண்டும் ஒருமுறை அதனை ஒழுங்குசெய்த அமைப்புக்கள் தமிழ் மக்களுக்கு இச்செய்தி ஊடாகவும் அறியத்தருகின்றனர்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.