புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் 3 கவச வாகனமும் தாக்கியழிப்பு

முல்லைத்தீவு  புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க முற்பட்ட சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

ltte_1

இதில் பெருமளவிலான படையினர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டுள்ளனர். படையினரின் 3 டாங்கிகள் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்காவின் 59வது டிவிசன் படையினர் பாரிய ஆயத்தங்களுடன் தயாராக இருந்தனர். இவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர்.
இதில் சிறிலங்கா படையினர் பெருமளவிலானோர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டுள்ளதுடன் 3 டாங்கிகள் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
மேலதிக விவரம் பின்னர் அறியத்தரப்படும்.
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.