ஒருவரை மட்டும் சுமந்து செல்லும் குட்டி மின்சார ஹெலிகாப்டர் அறிமுகம்

e41885f5d247d77d207f9f9923c82339சீன விமான தயாரிப்பு நிறுவனமான இஹேங் உலகிலேயே முதல்முறையாக ஒரே ஒரு மனிதரை மட்டுமே சுமந்து செல்லும் வகையில் குட்டி ஹெலிகாப்டர் ஒன்றை தயாரித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஹெலிகாப்டர் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் ஷோவில் இடம் பிடித்தது.

இந்த ஹெலிகாப்டர் மின்சார சக்தியில் இயங்கக்கூடியது. 220 பவுண்டுகள் வரையிலான எடையை சுமக்கும் திறன் வாய்ந்தது. மைக்ரோசாப்ட் சர்பேஸ் டேப்லட் மூலமாக இந்த ஹெலிகாப்டரை கட்டுப்படுத்தலாம். இந்த ஹெலிகாப்டரை மேலே எழுப்புவதற்கும், தரையிறக்குவதற்கும் இரண்டு கட்டளைகளை டேப்லட்டில் கிளிக் செய்தாலே போதுமானது.

அதிகபட்சமாக, 11,500 அடி உயரம் வரை பறக்கும். எனினும், 1,000 முதல் 1,650 அடி உயரம் வரை பறப்பதே பாதுகாப்பானதாக கூறப்படுகிறது. வேகத்தை பொறுத்த வரை மணிக்கு 63 மைல்கள் வரை செல்கிறது. கடல் மட்டத்தின் மேல் 23 நிமிடங்கள் வரை இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்யலாம். இதன் விலை தோராயமாக ரூ.2 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குவாட்-காப்டர்கள் என அழைக்கப்படும் இந்த குட்டி ரக ஹெலிகாப்டர்களில் 6 புரோப்பல்லர்களை கொண்டது. வானில் பறக்கும் போது இறக்கைகள் சுழல்வதில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் மீதமுள்ள இயங்கும் புரோப்பல்லர்களின் உதவியுடன் பாதுகாப்பாக தரையிறங்கிவிடும்.

எனினும், இந்த புதிய குவாட்-காப்டரை பயன்படுத்துவதற்கு அமெரிக்கா கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற உள்ளது. இதுபோன்ற ஒரு குவாட்-காப்டர் இதற்கு முன்பாக உலகில் தயாரித்தது இல்லை என இஹேங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.