பூமி உண்மையில் 2 கோள்களினால் ஆனது: புதிய ஆய்வில் தகவல்

earthபூமி மற்றும் நிலவு ஆகியவற்றிலுள்ள பெருங்கற்களை ஆய்வு செய்ததில் அறிவியலாளர்கள் புதிய கண்டுபிடிப்பிற்கான கொள்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதன்படி, இரு வெவ்வேறு கோள்கள் மோதி ஒன்றான வடிவே இன்றைய நமது பூமி என அவர்கள் தெரிவித்துள்ளனர். பூமியின் மீது தீயா என்ற கோள் மோதியுள்ளது. இதில் இரு கோள்களும் உருகி ஒன்றாகியுள்ளன. இரு கோள்களும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் உண்டான சிதறல்களில் இருந்து பூமியின் நிலவு தோன்றியுள்ளது. தீயா கோள் பூமி மற்றும் நிலவு ஆகியவற்றில் முழுவதும் ஒன்றிணைந்து கலந்து உள்ளது என ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.

இந்த தீயா கோள் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு கோள்களினால் பூமி சுற்றி வரும் வழியில் இழுத்து கொண்டு வரப்பட்டு விடப்பட்டு இருக்கும் என்ற கருத்தும் கூறப்படுகிறது.

சூரியனானது 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு தோன்றியிருக்க கூடும் என அறிவியலாளர்களால் கருதப்படுகிறது. சூரியனின் உருவாக்கத்தினை அடுத்து வாயு மற்றும் தூசு ஆகியவை மேகம் போல் படர்ந்திருக்கிறது. இது சோலார் நெபுலா என அழைக்கப்படுகிறது. இதில் இருந்து குறுகிய கால அளவில் நாம் வசித்து வரும் பூமியின் தோற்றம் அமைந்துள்ளது என நீண்ட நாட்களாக கருதப்பட்டு வருகிறது. அண்டம் குறித்து விரிவாக கூறப்பட்டுள்ள வரலாற்று தகவலின்படி, அதன்பின் 100 மில்லியன் வருடங்கள் கழித்து புதிய கோளான பூமி மீது, தீயா மோதியுள்ளது. அறிவியலாளர்கள் பூமியின் டிராஜன் ஆக தீயா இருந்திருக்கும் என நம்புகின்றனர்.

செவ்வாய் கோளின் அளவை கொண்ட தீயா, பூமியின் சுற்று வட்ட வழியிலேயே பயணம் செய்துள்ளது என்றும் அவர்கள் நம்புகின்றனர். இந்த புதிய கொள்கைக்கு முன்பு, இந்த மோதல் ஒரு பக்கத்திலேயே நடந்து தீயா கோளின் மிச்சமுள்ள பொருட்களில் இருந்து நிலவு தோன்றியிருக்க கூடும் என ஆய்வாளர்களால் கருதப்பட்டு வந்துள்ளது.

சில அறிவியலாளர்கள் உண்மையில் இரு நிலவுகள் இருந்து அதன்பின் அவை ஒன்றிணைந்து இருக்கலாம் என்றும் கருதியுள்ளனர். அது உண்மையெனில் பூமியில் இருந்து வேறுபட்ட பொருட்களால் நிலவு உருவாகியிருக்கும். ஆனால், கலிபோர்னிய பல்கலை கழகத்தை சேர்ந்த குழு ஒன்று நடத்திய ஆய்வில், இரண்டிலும் ஒரே வகையான அணுக்கள் உள்ளன என கண்டறியப்பட்டுள்ளது. எனவே, விண்வெளியில் பெரிய அளவில் நடந்த இந்த மோதலில் இரு கோள்களும் ஒன்றிணைந்திருக்க வேண்டும்.

அந்த ஆய்வின்படி பூமி மற்றும் நிலவு இரண்டும் ஒன்றாகவே இருந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆய்வை மேற்கொண்டுள்ள குழுவை சேர்ந்த பேராசிரியர் எட்வர்டு யங் கூறும்பொழுது, பூமி மற்றும் நிலவு ஆகிய இரண்டிலும் தீயா முழுவதும் ஒன்றிணைந்து உள்ளது. அவை இரண்டிலும் சம அளவில் பிரிந்தும் கலந்துள்ளது என கூறியுள்ளார். அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள் குறித்த தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் மற்றும் விண்வெளி நட்சத்திரங்கள் குறித்து பொழுதுபோக்காக ஆய்வில் ஈடுபட்டுள்ளோர், இந்த வருடம் பூமியின் மீது சூரிய குடும்பத்திற்கு வெளியே மறைந்த நிலையில் உள்ள நிபிரு எனப்படும் பெரிய அளவிலான கிரகம் மோத கூடும் என எச்சரிக்கை செய்துள்ளனர்.

இதனை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா மறுத்துள்ளது. ஆனால், புளூட்டோவிற்கு பின்னால் கோள் ஒன்பது (பிளேனட் நைன்) என்ற பெயரிலான பனி நிறைந்த பெரிய கோள் ஒன்று மறைந்துள்ளது என்று வானியியலாளர்கள் இதனை உறுதி செய்துள்ளளனர். கோள் ஒன்பது என்பது நிபிரு என்றும் நம்மை எல்லாம் அது அழித்து விடும் என்றும் சில தத்துவயியலாளர்கள் கருதுகின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.