இன்றைய இந்தியாவின் சிக்கலை அன்று கூறிய பிரபாகரன்

நீண்ட காலங்களுக்கு பிறகு , ஒரு பேட்டியின் போதான சந்திப்பில் ‘எனது தைரியத்தையும் 1983 கொழும்பில் நிகழ்ந்த கலவரத்தை பற்றி நான் செய்தி சேகரித்தன் முறையையும்’ கண்டு வியப்பதாக சொன்னார் பிரபாகரன். Anitha-Prathap-ltteஅதோடு, ‘நாங்கள் கொரில்லா போராளிகள், நாங்கள் ஆபத்தையே பாதையாக தேர்ந்தெடுத்துள்ளதால் கடுமையா ன சூழல்கள் எங்களுக்கு பழகிப்போனவை.

ஆனால் ஒரு பத்திரிகையாளராக நீங்கள் உயிரை பணயம் வைக்க வேண்டும் என்பதில்லை, இருப்பினும் இந்த மோதல்மிக்க பிரதேசத்திலிருந்து உண்மையை கொண்டு வரும் விதமாக செயல்பட்டிருக்கிறீர்கள். உங்கள் செய்திகளே தமிழர்களின் பிரச்னையை சர்வதேசமயப்படுத்தியிருக்கிறது, அதற்காக என்றும் தமிழ் மக்கள் உங்களுக்கு நன்றிகுரியவர்களாக இருப்பார்கள்’ என்றார் பிரபாகரன்.

அவர் பாராட்டில் நான் நெகிழ்ந்து போய்விட்டேன் என்றே சொல்லவேண்டும். 1983 கலவரத்தின் சில மாதங்களுக்கு பிறகு, பிரபாகரன் அவருடைய முதல் பேட்டியை எனக்களித்தார். அதன் பிறகு தமிழர் போராட்ட வரலாற்றில் ஒவ்வொரு குறிப்பிடத்தக்க நிகழ்வின் போதும் அவர் எனக்கு பேட்டியளித்தார். அவரை நான் ‘இரக்கமற்றவர், கொடுங்கோலர், அகந்தை கொண்டவர்’ என்றெல்லாம் கூட குறிப்பிட்டிக்கிறேன் என ‘ஐலான்ட் ஆப் பிலட் என்ற நூலின் ‘தம்பியிலிருந்து அன்னை’ பாகத்தில் தெரிவித்துள்ளார் அனிதா பிரதாப்.

அனிதா பிரதாப்பின் கேள்விகளுக்கு பிரபாகரன் சொல்லியிருக்கும் பதில்கள் அக்காலக்கட்டத்தில் மிகவும் முக்கியமானவை.

மார்ச் 11-17,1984 சண்டே இதழில் வெளியானது பிரபாகரனின் முதல் பேட்டி.

அனிதா: வழக்கமான அரசியல் அமைப்பில் இருந்து விலகவும், ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்கவும் உங்களைத் தூண்டியது எது? அத்தகைய ஒரு விடுதலை இயக்கம் சட்ட விரோதமாக்கப்படும் என்பது உங்களுக்குத் தெரியும்தானே?

பிரபாகரன்: இலங்கையின் சனநாயகப் பாராளுமன்ற அமைப்பு அல்லது நீங்கள் சொல்வதைப் போல இலங்கையின் வழக்கில் உள்ள அரசியல் அமைப்பு எப்போதுமே பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தையே சிறுபான்மையினர் மீது திணித்து வந்திருக்கிறது. இந்த அரசு அமைப்பானது எங்கள் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறிவிட்டது என்பதுடன், எமது நிலையை மேலும் மோசமாக்கிவிட்டது. காலம் காலமாக அரசின் ஒடுக்குமுறை ஆட்சியானது எம் மக்களின் வாழ்வு நிலையைச் சகிக்க முடியாததாகவும்ம துன்பகரமானதாகவும் மாற்றிவிட்டது.

எம் மக்கள் நடத்திய சாத்வீக சனநாயகப் போராட்டங்கள் இராணுவத்தால் நசுக்கப்பட்டன. எமது நியாயமான கோரிக்கைகள் முற்று முழுவதாகப் புறக்கணிக்கப்பட்டதுடன் இந்த அடக்குமுறையானது தமிழ் மக்களின் உயிர் வாழ்வுக்கே ஆபத்தாக அமைந்தது. இத்தகைய சூழ்நிலைகளே ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்க என்னத் தூண்டின. தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மட்டுமல்ல, சிங்கள அடக்குமுறையிலிருந்து இறுதியாகத் தங்களை விடுவித்துக் கொள்ளவும் எம் மக்களுக்கு ஆயுதப் போராட்டமே நடைமுறைச் சாத்தியமான ஒரே வழியென்று நான் உணர்ந்தேன். எங்கள் இயக்கம் தடை செய்யப்படும் என்பது எனக்கு முன்கூட்டியே தெரியும். அதனால்தான் எங்கள் இயக்கத்தை அதன் ஆரம்ப காலத்திலிருந்தே ஒரு தலைமறைவு இயக்கமாக உருவாக்கினோம்.

அனிதா: இலங்கைத் தமிழர்களுக்கு ஆயுதப் போராட்டமே ஒரே வழியென்று நீங்கள் தீர்க்கமான முடிவுக்கு வர நிர்ப்பந்தித்த உங்களின் தனிப்பட்ட அனுபவங்களைச் சற்றுக் கூறுவீர்களா? கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இலங்கை அரசு காட்டிய பாரபட்சமான கொள்கையால் நீங்களோ உங்கள் குடும்பதவரொஒ அல்லது உங்களது நண்பர்களோ நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனரா?

பிரபாகரன்: நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோதது1958ஆம் ஆண்டின் இனக் கலவரங்களில் நிகழ்ந்த பயங்கரச் சம்பவங்கள் என் மனத்தில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியர்களால் எம் மக்கள், ஈவிரக்கமில்லாது குரூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். எங்கள் குடும்பத்திற்கு தெரிந்த ஒரு விதவைத் தாயை நான் ஒருமுறை சந்தித்தபோது அவர் இந்த இன வெறியாட்டத்தால் தனக்கு நேர்ந்த துயரமான அனுபவத்தை என்னிடம் சொன்னார். இனக் கலவரத்தின் போது சிங்களக் காடையர்கள் கொழும்புவிலிருந்த அவர் வீட்டைத் தாக்கினார்கள். அவரது வீட்டுக்குத் தீ வைத்து, அவருடைய கணவரையும் குரூரமாகக் கொலை செய்தனர். அவரும் அவரது பிள்ளைகளும் பலத்த எரிகாயங்களுடன் தப்பினார்கள்.

அவரது உடலில் காணப்பட்ட எரிகாயத் தழும்புகளைப் பார்த்தபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். சிறு குழந்தைகளைக் கொதிக்கும் தாருக்குள் உயிருடன் வீசிக்கொன்ற கோரச்சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கேட்கும்போது என் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும், அன்பும் ஏற்பட்டன. இந்த இனவெறி அமைப்பின் பிட்டிக்குள்ளிருந்து எம் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற பெரும் உந்துதல் என்னிடம் தோன்றியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று நான் ஆழமாக உணர்ந்தேன்.

அனிதா: உங்களைப் புலிகள் என்று ஏன் அழைத்துக் கொள்கிறீர்கள் ?

பிரபாகரன்: தமிழர்களின் அரசியல் வரலாற்றில் புலிச்சின்னமானது ஆழ்ந்து வேரோடி இருப்பதால் தான் எமது இயக்கத்திற்கு ‘விடுதலைப் புலிகள்’ என்று பெயரிட்டேன். புலிச்சின்னமானது தமிழ்த் தேசியத்தின் புத்தெழுச்சியை உருவகப்படுத்துகிறது. அத்துடன் கொரில்லா யுத்த முறையைய்யும் புலிச்சின்னம் குறித்து நிற்கிறது.

அனிதா: விடுதலைப் போராட்டத்தில் உங்களது நீண்டகால அனுபவமானது, வாழ்க்கை பற்றிய உங்களது நோக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்த அனுபவங்களின் மூலம் உங்கள் பார்வையில் ஏற்பட்ட தாக்கங்கள் பற்றியும், உங்கள் இலட்சியத்தில் எழுந்த உறுதிப்பாடுகள் பற்றியும் கூறுவீர்களா? அத்துடன் உங்கள் அனுபவங்கள் நீங்கள் ஏற்கனவே வரித்துக் கொண்ட சில கொள்கைகள், கோட்பாடுகள் நடைமுறையில் எத்துணை பொருத்துமற்றது என்பதனை உணர்த்தும் அதேவேளையில் வேறு சில சரியானவைதாம் என்ற கருத்தினையும் ஏற்படுத்தியிருக்கலாம் அல்லவா ? அவற்றில் சிலவற்றைக் கூறுவீர்களா?

பிரபாகரன்: நாங்கள் வரித்துக்கொண்ட ஆயுதப் புரட்சிப் பாதை மிகவும் சரியானது என்பதைக் கடந்த 12 வருடகால அனுபவங்கள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் எனக்கு உணர்த்தியிருக்கின்றன. எமது ஆயுத ரீதியிலான போராட்ட வடிவத்தை ‘பயங்கரவாதம்’ என்று விமர்சித்த மற்ற விடுதலைக் குழுக்குள் ஒடுக்கப்பட எமது மக்களின் விடுதலைக்கான ஒரே வழி ஆயுதப் போராட்டம் தான் என்பதை இப்போது ஏற்றுக்கொண்டு விட்டன. நாங்கள் கைக்கொண்ட கொரில்லா யுத்தமுறையானது விடுதலைப் போராட்டத்தின் வலிமைமிக்க வடிவமாக அமைந்திருக்கிறது.

எமது வெற்றிகரமான கொரில்லாத் தாக்குதல்கள், சிங்கள ஆயுதப் படைகளைத் தோற்கடித்து, சுதந்திரத்தை வென்றெடுக்க எம்மால் முடியுமென்ற நம்பிக்கையை எமது மக்களுக்கு ஊட்டியிருக்கின்றன.

இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.

அனிதா: இலங்கை அரசாங்கத்தால் தேடப்படுபவர்களில் முதன்மையானவராக இருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பிரபாகரன்: பிரிட்டிஷ் அரசாங்கம் யாரைப் ‘பயங்கரவாதி’ என்று சொல்கிறதோ, அவனே உண்மையான ஐரிஸ் தேசியப் போராளி என்று ஐரிஸ் தலைவர் ஒருவர் குறிப்பிட்டார். அதுபோல, இலங்கை அரசு என்னைத் தேடப்படுபவர்களில் முதன்மையானவராகக் கருதினால் அது நான் உண்மையான தமிழ்த் தேசிய போராளி என்பதையே உணர்த்துகிறது. அவ்வாறு தேடப்படும் நபராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

அனிதா: எதிர்காலத்தில் தமிழர்கள் மீது தாக்குதல்களை எதிர்பார்க்கிறீர்களா ? எந்தக் காரணத்தை முன்னிட்டு?

பிரபாகரன்: ஆம். நான் எதிர்பார்க்கிறேன். திருகோணமலையிலும் வவுனியாவிலும் பெரும் எண்ணிக்கையில் தமிழர்களைக் கொல்லுவதற்கான ஒரு நாசகாரத் திட்டத்தை இனவெறி பிடித்த பாசிச சக்திகள் உருவாகி வருகின்றன.

தங்களுடைய உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்கும் சக்தி வாய்ந்த தேசிய இராணுவத்துடன் சுதந்திரமான தமிழீழத் தேசம் உருவாக்கப்படும் வரை தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது.

 

 

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.