தமிழகத்தில் இலங்கை அகதிகள் மத்தியில் அவுஸ்திரேலிய கனவு தொடர்கிறது

அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் இந்தோனேசியாவில் இலங்கை அகதிகள் படும்துன்பங்களுக்கு மத்தியில் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாம்களில் தொடர்ந்தும்அவுஸ்திரேலியா படகு பயணங்களுக்கான நடவடிக்கைகள் தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

625.70.560.350.160.300.053.800.100.160.80மனித கடத்தல்காரர்கள் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக தமிழகதகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் உள்ள முகாம்களின் நிலை மோசமாக இருப்பதாக கூறியே இந்த முயற்சிகளைமனித கடத்தல் காரர்கள் மேற்கொண்டு வருகின்றன.

ஒரு ஆளுக்கு ஒரு லட்சம் இந்திய ரூபாய்கள் என்ற அடிப்படையில் இந்த கடத்தல்கள்இடம்பெற்றுவருகின்றன.

கடந்த 2ஆம் திகதியன்று அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் நோக்கில் தமிழகத்தில் இருந்துபுலிகட் வாவியின் ஊடாக ஆந்திர பிரதேசத்துக்கு சென்ற 28 இலங்கை அகதிகள்கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களில் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது குறித்த வாவியில் உல்லாப்பயணிகளைபோன்று நடித்து பின்னர் கரையில் உள்ள படகின் மூலம் கிறிஸ்மஸ் தீவுகளுக்குஅழைத்துச் செல்லும் திட்டத்தின் அடிப்படையிலேயே தாம் அழைத்துவரப்பட்டதாகதெரிவித்திருந்தனர்.

இவர்கள் புலிகட்வாவியில் பயணிக்கும் போது வீதிவழியாக இரண்டு வாகனங்கள் இவர்களுக்குபாதுகாப்புக்காக சென்றுள்ளன.அவற்றின் சாரதிகளும் இதன்போது கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் தொடர்ந்தும் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் நோக்கம் அகதிகள்மத்தியில் இருந்து வருவதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

எனினும் எந்தவொரு படகு அகதியையும் தாம் ஏற்கப்போவதில்லை என்று அவுஸ்திரேலியஅரசாங்கம் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.