வானொலித் துறையில் கனடாவில் ஈழத் தமிழரின் புதிய கின்னஸ் சாதனை!

2014 ஆம் ஆண்டு மே மாதம் 12ம் திகதி நெதர்லாந்து நாட்டை சேர்ந்த Giel Beelen என்பவரால் நிகழ்த்தப்படட 198 மணித்தியாலங்கள் தொடர்ச்சியான வானொலி அறிவிப்பு (DJ Marathon) என்னும் கின்னஸ்உலக சாதனையை கனடாவில் வசிக்கும் சுரேஷ் ஜோகிம் என்னும் தமிழ் கலைஞர் இன்று முறியடித்து புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.suresh-cmr-240616-380-seithy மேலும் அவர் 250 மணித்தியாலங்கள் என்னும் இமாலய இலக்கை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றார். கடந்த புதன் கிழமை கனேடிய கிழக்கு பிராந்திய நேரம் காலை 7.10 க்கு ஆரம்பித்த அவரின் பயணம் எதிர்வரும் சனிக் கிழமை 250 மணித்தியாலங்களை பூர்த்தி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. சாதனைத் தமிழர் சுரேஷ் ஜோகிமிற்கு செய்தி இணையத்தளம் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமை கொள்கின்றது. தொடரட்டும் உங்கள் சாதனை பயணம் – பெருமைகொள் தமிழா.

 

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.