அவுஸ்திரேலிய தேர்தலும் இலங்கைத் தமிழ் அகதிகளின் தஞ்சக்கோரிக்கைகளும்…

அவுஸ்திரேலியாவில் நாளை நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் ஆட்சியை பிடிப்பது லிபரல் கட்சியா? லேபர் கட்சியா? என்ற விவாதத்தோடு புகலிடகோரிக்கையாளர்களின் பிரச்சினையும் பெரிதளவில் பேசப்படுகிறது.

625.70.560.350.160.300.053.800.100.160.80இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு தமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சிக்கும் இலங்கை தமிழ் அகதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இப்போதைய நிலையில் இந்தோனேசியாவில் 44 இலங்கை தமிழ் அகதிகள் தற்காலிக வசிப்பிடத்திலும், தமிழகத்தின் முட்டம் திருச்செந்தூரிலிருந்து அவுஸ்திரலியாவுக்கு செல்ல இரண்டு குழுவினர் கைது செய்யப்பட்டும் இருக்கின்றனர்.

அதோடு அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்ததாக பல இடங்களில் கைதுகள் இடம்பெற்று இருக்கின்றன.

அவுஸ்திரேலியா அரசு தொடர்ந்து அகதிகள் பிரச்னையில் கடுமையான போக்கை கையாண்டு வரும் நிலையில், ஆட்கடத்தல்காரர்கள் அங்கு நடக்கவிருக்கும் தேர்தல் அகதிகள் உள்ளே நுழைவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்ற போலியான நம்பிக்கையினை கொடுக்கின்றனர்.

கடந்த லேபர் கட்சியின் ஆட்சியில் 800 படகுகள் அவுஸ்திரேலியாவை வந்தடைந்தன. அதில் வந்த 30 ஆயிரம் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அப்போதைய அரசு தற்காலிக விசாவினை கொடுத்தது.

அதை முழுமையாக அகற்றி அவர்கள் வேலை செய்வதற்கான உரிமை தரப்படும் என இப்போது சொல்கிறது லேபர் கட்சி.

ஆளும் லிபரல் கட்சி இதை அகதிகளை வரவேற்கும் முயற்சி என குற்றம்சாட்டுகிறது.

இப்போது அவுஸ்திரேலியாவில் தற்காலிக விசா கொண்ட அகதிகளுக்கு மட்டுமே இது பொருந்தும், நாங்களும் ஒருபோதும் புதிய புகலிட கோரிக்கையாளர்களின் படகுகளை அனுமதிக்க மாட்டோம், திருப்பியே அனுப்புவோம் என்கிறது லேபர் கட்சி.

இந்த நிலையில் புதிதாக தஞ்சம் கோருபவர்கள் தொடர்பான பிரச்சினை லிபரல் கட்சியும் லேபர் கட்சியும் ஒரே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றன.

ஆட்கடத்தல்காரர்களின் போலியான நம்பிக்கையின் கீழ் கடலில் பயணிப்பது ஒருபோதும் அவுஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கையில் மாற்றத்தினை ஏற்படுத்தாது.

ஏனெனில் 2009 இலங்கைப் போரின் முடிவுக்கு பின்னர் ஆஸ்திரேலிய அரசு தமிழ் அகதிகளை பொருளாதார அகதிகளாகவும் முத்திரை குத்துகிறது.

இதனால் அவுஸ்திரேலியா கடல் பயணம் உயிர் ஆபத்து கொண்டது என்பதோடு எதிர்கால வாழ்வினை அழிக்க கூடியதாகவும் இருக்கும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.