“இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் வாரத்தின் முதலாம் நாள்”…!

எம் அண்ணனின் எண்ணத்தில் உதித்த சிந்தனைத் துளிகள்”…!!!

7909_1* “கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள் எமது போரட்டப் பாதையின் தடைநீக்கிகள் எதிரியின் படை பலத்தை தமது மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்”…!!!

* “உலக வரலாற்றில் எங்கும் எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும் அதிசயமான அர்ப்பணிப்புகளும் மாபெரும் அற்புதங்களும் எமது தமிழீழத் தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன”…!!!

-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்-

* ” தமிழீழக் கரும்புலிகள் அடிமுடி அறிய முடியாத மாபெரும் அற்புதங்கள்”…!!!

* “தானைத் தலைவனின் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிராயுதங்கள் சாவுக்குத் தேதிகுறிக்கும் அடிமுடி அறிய முடியாத மாபெரும் சரித்திரங்கள்”…!!!

* ” தமிழீழ உயிராயுதங்கள் அடிமுடி அறிய முடியாத மாபெரும் அற்புதங்கள்”…!!!

“பெரும் கந்தகத்தை தம்மேனியிற் கட்டிய சந்தனங்கள் இவர்கள்”…!!!

“வீதியுலாவுக்காக வெளியில் வராத விக்கிரகங்கள் இவர்கள்”…!!!

“உயிர்மூச்சை ஊதிவிடும் மாபெரும் உன்னதங்கள் தமிழீழக் கரும்புலிகள்”…!!!

“அடிமுடியை யாரும் அறியமுடியாத அற்புதங்கள் – தென்றலும் பெரும் புயலும் சேர்ந்ததான கலவைகள் கரும்புலிகள்”…!!!

“தமிழீழக் கரும்புலிகள் – இவர்களை எழுதத் தொடங்கினால் எந்தமொழியும் தோற்றுப்போகும்”…!!!

“வார்த்தைகள் வறுமை அடையும் – உளவியலாளர்கள் உள்ளே புகுந்தாலும் வெறும்கையோடுதான் வெளியே வருவார்கள்”…!!!

“கற்பனைக்கவிஞர்கள் கவிதை எழுதினால் அற்புதம் என்பார்கள் அடுத்தவார்த்தை வராது”…!!!

“சித்திரக்காரர்களும் தீப்பிழம்பைத்தானே தீட்டமுடியும்”…!!!

“தலைவவனைத் தவிரப் பக்கத்திலிருந்து பழகியவர்கள் கூடக் குறிப்புக்கள் மட்டும் தான் கூறமுடியும்”…!!!

“ஆழத்தோண்டினாலும் மூலவேர் தலைவவனைத் தவிர எவருக்கும் தெரியவே தெரியாது”…!!!

“பெரும் சமுத்திர நீரை வெறும் அகப்பையால் அள்ளி அளக்கமுடியுமா?.?.?

“ஓடும் முகிலை ஏணிவைத்து எட்டித் தொட்டுவிட முடியுமா?.?.?

“எதிரியின் எந்தவலுவும் இறுதியில் இவர்களிடம் (கரும்புலிகளிடம்) தான் சரணடையும்”…!!!

* “கடைசி நொடிவரை சிரித்தபடி திரிவர்கள் – மறுநாள் வெடித்த செய்தி வெளிவரும்போது சமிகளும் ஜாதகமும் சோதிடமும் தங்களுக்குத் தாங்களே தீமூட்டிக் கொள்ளும்”…!!!

“காலால் நடந்து வாயால் மொழிந்து கையால் தலைவாரிக் கொண்டு எல்லோரையும் போலவேதான் இவர்களும்”…!!!

“கரும்புலிகள் உள்ளே எரியும் தமிழீழ விடுதலைக் கனல் – தமிழர்களின் விடுதலைக் கனல் மட்டும் வேறுபட்டது”…!!!

“தங்கள் உயிர்ப் பூவை கிள்ளி எடுத்து தமிழீழ விடுதலைக்கு விலைகொடுக்கும் வித்தியாசமானவர்கள் கரும்புலிகள்”…!!!

“கிட்ட நெருங்க முடியாத இலக்குகளைக்கூட தொட்டு அசைத்துவிடும் மாபெரும் துணிச்சலர்கள் இவர்கள்”…!!!

* “முதுகில் வேர்க்குரு போட்டாலே முந்நூறு மருந்துகள் தேடும் இவ் உலகில் சாவைத் தம் தோள்களில் சுமந்து நொடிகளை கணக்கிட்டு நகரும் நூதனங்கள் தரையிலும் நீரிலும் வானிலும் காற்றிலும் இவர்கள் கலக்கும்போது காற்றுக்கு வேர்க்கும்”…!!!

“நீர் நெருப்பாகிவிடும் – இவர்களுக்கு (கரும்புலிகளுக்கு) சூரியன் கூடக் கைகளுக்கு எட்டும் தூரம்தான்”…!!!

“பசுபிக் சமுத்திரம் முழங்கால் ஆழம் – கரும்புலிகள் தலைவன் தலைவாரிவிடும் மாபெரும் புயல்கள்”…!!!

“தாயை நேசிக்கும் அளவுக்கு எம் தாணைத் தலைவனையும் நேசிப்பவர்கள் கரும்புலிகள்”…!!!

“தமிழீழத் தாயகத்தை மட்டும் பூசிப்பவர்கள் கரும்புலிகள்”…!!!

“ஆவிபிரியும் அடுத்த கணம்பற்றிய அச்சம் இவர்களின் (கரும்புலிகள்) அகராதியில் அச்சிடப்படுவதில்லை”…!!!

* “யூலை மாதம் 05 ஆம் தேதி – 1987 ஆம் ஆண்டு கருமைக்கும் பெருமையும், வீரமும் வந்த நாள்”…!!!

* “எம் தானைத் தலைவன் வளர்த்த தமிழீழ விடுதலைப் புலியொன்று முதல் கரும்புலியான தினம் யாழ் / நெல்லியடியில் “மில்லர்” புதிய வரலாற்றை தொடக்கிய நாள்”…!!!

* ” ‘தமிழீழ விடுதலைப் புலிகள் எல்லாம் சரி வடமாராட்சி எமது கட்டுப்பாட்டில்’ என்று கொழும்புக்குச் செய்தி அனுப்பியவனின் வாய் மூட முன்னர்
சிறிலங்காச் சிங்களவர்கள் செவிப்பறைகள் கிழிந்தன.

சாவு நேரே ஓடிவந்து முகத்தில் சந்திக்குமென்று எதிரிகள் எப்படி எதிர்பார்த்திருப்பார்கள்.

* “தானைத் தலைவனின் தமிழீழ விடுதலைப் புலிகளின் ” உயிராயுதம் ” மாபெரும் வலுவானது”…!!!

* “தானைத் தலைவனின் தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் தேவை அறிந்து செல்பவர்களே அன்றி சாவை விரும்பிச் சந்திப்பவர்களல்ல – இவர்கள் வசந்தம் தழுவாத கொடிகளோ – முகில்கள் முத்தமிடாத மலைமுகடுகளோ அல்ல – இதயம் இரும்பாலானவர்களும் அல்ல – பனியாய் உருகும் நெஞ்சுக்கும் பாகாய் இனிக்கும் வார்த்தைகளுக்கும் உரிமையாளர்கள் இவர்கள்”…!!!

* “உயிராயுதங்கள் வெடித்த பின்னரும் இவர்கள் எல்லோரும் வெளிச்சத்துக்கு வருவதில்லை – சுவரொட்டியில் சிரிப்பவர்கள் சிலர்தான் – “நடுகல் நாயகர்கள் – நாயகிகள்” ஆகும் வாய்ப்பும் எல்லோருக்கும் ஏற்படப் போவதும் இல்லை – கல்லறைகள் கூட இல்லாத காவியமாய் வாய்விட்டு சொல்லியழும் வாய்ப்பும் இல்லாமல் வெளியே தெரியாத வேரின் வாழ்வு கரும்புலிகள் வாழ்வு”…!!!

* “பலருக்கு மரணம் வாழ்வின் முடிவு கரும்புலிகளின் ஜனனம் மட்டும் மரணத்தில்தான் ஆரம்பம் கால நதியில் இவர்கள் ஓடிக் கரைய மாட்டார்கள்”…!!!

* “மற்றவர்களுக்கு இனி என்ன செய்வதுதென்று தலைவெடிக்கும் போதுதான் இந்தச் சுகந்த ஊதுபத்திகள் உடல்வெடித்துப் போகிறார்கள்”…!!!

* “ஊரறியாமலே உண்மைகள் கலங்கும் ஒருபெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும் வேருக்கு மட்டுமே (தாணைத் தலைவனுக்கு மட்டுமே) விழுதினைப் புரியும் வெடிமருந்தேற்றிய கருவேங்கையைத் தெரியும்”…!!!

* “பூகம்பத்தை போத்தலில் அடைத்தது போல வந்தவரிகளில் வென்றவரிகள் இவை”…!!!

“கரும்புலிகளுக்கு காணிக்கை தான் என்ன?.?.? கண்ணீரா?.?.? கல்லறையா?.?.? இல்லை, இல்லை எதுவுமே இல்லை எம் நெஞ்சின் நினைவே நெடிய கோபுரம் இவர்கள்”…!!!

* “தானைத் தலைவனின் தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் சாவுக்குத் தேதிகுறிக்கும் அடிமுடி அறிய முடியாத மாபெரும் சரித்திரங்கள்”…!!!

* “தானைத் தலைவனின் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிராயுதங்கள் சாவுக்குத் தேதிகுறிக்கும் அடிமுடி அறிய முடியாத மாபெரும் சரித்திரங்கள்”…!!!

* “தமிழ் ஈழப் போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு – இந்தப் போராட்டம் தமிழீழம் மீட்கும் வரை தொடரும்”…!!!

* “நாம் ஆடிய ஆட்டம் என்றும் அடங்காது – வேலுப்பிள்ளை பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிக் கூட்டம் என்றும் உறங்காது”…!!!

* “நாம் மௌனித்திருக்கின்றோமே தவிர மரணிக்கவில்லை”…!!!

* “சின்னச் சின்னக் கூடுகட்டி நாமிருந்த ஊர்பிரிந்தோம் தென்னிலங்கைப் பேய்களினால் நாமிருந்த கூடிழந்தோம் கண்களிலே நீர்வழிய காலெடுத்து நாம் நடந்தோம் “வட்டுவாகலுக்கு” வந்தபின்னும் செய்வதறியாதிருந்தோம் தமிழ் ஈழ விடுதலைக்கு நாம் கொடுத்த விலையிது – எங்கள் தலைமுறைக்கு நாம் கொடுத்த உயிரிது”…!

“வந்தவழி நாம் நடந்து வாசல் புகவேண்டும் – எங்கள் வயல் வெளிகள் மீண்டும் இனி அழகொளிர வேண்டும் எந்தையர்கள் வாழ்ந்திருந்த ஊர் திரும்ப வேண்டும் – தமிழ் ஈழமதைக் காணுகின்ற நாளும் வரவேண்டும்”…!

“எழடா…எழடா இனியும் குனிவாய் எனிலோ அழிவாய் தமிழா வருவாய் வருவாய் புலியாய் வருவாய் எனிலோ மகிழ்வாய் தமிழா எமதூர் முழுதும் அழிவான் பகைவன் படையாய்த் தமிழா எழடா பிரபாகரன் படையாய் நிமிர்வாய் வருவாய் தமிழா உடனே”…!

“வெய்யில் மழை பனியிலும் வீதியிலே நாமிருந்தோம் வீடிழந்து கூடிழந்து நாதியற்று நாம் திரிந்தோம் பொய்யுரைக்கும் பேய்களுக்கு நாம் பயந்து வந்தோம் – எங்கள் பெருந்தலைவன் பாதையிலே போகுமிடம் கண்டோம்”…!

“எழடா…எழடா இனியும் குனிவாய் எனிலோ அழிவாய் தமிழா வருவாய் வருவாய் தமிழீழ விடுதலைப் புலியாய் வருவாய் எனிலோ மகிழ்வாய் தமிழா எமதூர் முழுதும் அழிவான் பகைவன் படையாய்த் தமிழா எழடா பிரபாகரன் படையாய் நிமிர்வாய் வருவாய் தமிழா உடன”…!!!

* “ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் – இது ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்”…!

“பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்கு போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்”…!

“ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் – இது ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்”…!

“உங்களுக்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும் – ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும் பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய் விடுவீர்கள்
போன பின்னர் நாமழுவோம் யாரறிவீர்கள்”…!

“ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் – இது ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள”…!

“தமிழீழத் தாயகத்து மண்ணைத்தானே காதலித்தீர்கள் – சாவை எதிர் பாரர்த்து பார்த்துக் காத்திருந்தீர்கள் பாயும் கரும்புலிகளாகிப் பகை முடித்தீர்கள் பாதகரின் நெஞ்சினிலே போய் வெடித்தீர்கள்”…!!!

“ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் – இது ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள”…!

“கல்லுக்குள்ளே ஈரமுண்டு கசிவதுண்டு கரும்புலிகளின் விழிகளில் நீர் வழிவதுமுண்டு அல்லும் பகலும் அண்ணன் பெயரை உச்சரித்தீர்கள் அந்தப் பெயர் சொல்லி உங்கள் மேனி பிச்செறிந்தீர்கள்”…!

“ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் – இது ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்”…!

“பேரிரைச்சலோடு ஒரு பெரும் வெடி வெடித்திடும் இங்கு போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்”…!

* “ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் – இது ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள”…!!!

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.