நேற்று சுவாதி, இன்று சந்தியா, நாளை யாரோ?

ஒரு காலகட்டத்தில் இதிகாசங்களை செதுக்கும் விதமாக அமைந்த காதல், தற்காலத்தில் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுகளாக மாறிக் கொண்டு தான் இருக்கிறது.

625.70.560.350.160.300.053.800.100.160.80பொருத்தமில்லாதவரை தேர்ந்தெடுத்து ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்ணினத்தின் மரணங்களுக்கு காரணங்களாய் அமைவது வாடிக்கையாகி விட்டது.

தாய்மையைப் போற்றும் மங்கையராய் பிறத்தல் மிக மிக அரிது. எனவே பெண்ணாய் பிறந்த ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டும் என்பர். அப்படிப்பட்ட பெண்களை ஒரு தலைக்காதல் என்ற பெயரில் உயிரைப் பறிக்கும் கலிகாலம் தற்போது உலகெங்கும் பரவியுள்ளது.

உலகில் பெண்ணியம் உண்டு, பெண்களுக்கு பாதுகாப்புண்டு என கூறுபவர்களுக்கு நடுவில் ஒருதலைக் காதலுக்காக கழுத்தை அறுத்து கொள்வது, சம்மதம் கூறாவிட்டால் ஆவேசத்தில் கூட்டுவன்புணர்வு செய்து கொலை செய்வது மற்றும் திராவகம் வீசி கொலை செய்தல் போன்றவற்றால் பெண்களின் உயிர்களுக்கு உத்தரவாதமின்றி ஊசலாடும் நிலை தற்போது நிலவி வருகின்றது.

இந்திய மக்களையே அச்சத்தில் தள்ளிய சம்பவம் தான் சமீபத்தில் இடம்பெற்ற மென்பொருள் பொறியியலாளர் சுவாதியின் கொலை. பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் வைத்து கழுத்தை வெட்டிக் கொலை செய்யப்பட்டது யாவரும் அறிந்ததே. இந்தக் கொலைக்கான காரணம் ஒருதலைக் காதல் என்பது பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியாவில் சுவாதி பின்னர் சந்தியா. சுவாதி கொலையின் சூடு தணியும் முன் இந்தியாவில் மீண்டும் மக்களை உலுக்கிய சம்பவம், 18 வயதான சந்தியா கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டது. பள்ளிப் பருவத்திலிருந்து ஒரு வருடமாக ஒரு தலைக்காதலுக்கு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் வேறொரு திருமணம் செய்து கொள்ளப் போவதாக சந்தியா கூறியதன் விளைவு உயிர் பறி போனது.

பெண்களைக் கண்டால் பேயும் இரங்கும் என்ற காலம் தற்போது மழுங்கடிக்கப்பட்டுள்ளது. அம்பாறையில் காதலை ஏற்க மறுத்ததால் நண்பர்களின் உதவியுடன் தனிமையில் அழைத்து வந்து காதலித்த பெண்ணை கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்த சம்பவம் மக்களை வியப்புக்ககுள்ளாக்கியுள்ளது.

இலங்கை மக்களிடையே பல மாதங்கள் கடந்த பின்னும் பேசப்படும் ஒரு சம்பவம் பள்ளி மாணவி வித்தியா கொலை. புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வண்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டமை. காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் கோபமுற்று நண்பர்களுடன் இணைந்து பாடசாலைக்கு சென்ற மாணவியை கடத்தி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்தவனும் ஒரு தலைக் காதலனே.

இவ்வாறு உலகில் ஒரு தலைக் காதலுக்காக பெண்களை கொலை செய்வது ஏன்? நேற்று சுவாதி இன்று சந்தியா நாளை யாரோ? இதற்கு தீர்வு கிடைக்காதா? என்ற ஏக்கம் தற்போது பெண்கள் மத்தியில் அதிகம் காணப்படுகின்றது.

இவ்வாறான கொலைச் சம்பவங்களுக்கு ஊடகங்களும் துணைபோகின்றனவா? என்ற சந்தேகமும் எழத்தான் செய்கின்றது. காரணம் கொலை. கொலைச் சம்பவத்தை நியாயப்படுத்துவதற்காக கொலையினை தெளிவாக விபரிக்கின்றன. அதுவே அடுத்த கொலையினை செய்வதற்கு தூண்டுதலாக அமைகின்றன என்றும் கூறலாம். இருந்தாலும் இறந்தவரை மறுபடியும் கொலை செய்வதும் நியாயம் இல்லைதானே. இத்தகைய கொலைகளின் காரணம் தான் என்ன? தனிப்பட்ட மனித குரோதத்திற்காக இடம்பெறுகின்ற என்றாலும் கொலையாளி எப்போதுமே நினைத்திருக்கமாட்டான் கொலைக்கு பின்னால் எத்தனை பாதிப்புக்கள் நிகழும் என்பதை மட்டும்.

தன்னுடைய விருப்பத்திற்கு ஈடுகொடுக்காதவர்களை கொன்றொழித்து விட்டால் நியாயமாகிவிடும் என எண்ணப்படுமாயின், அன்றாடம் இந்த உலகம் பிணங்களுக்கிடையில் தான் வாழ நேரிடும். உலகமே சுடுகாடாகிவிடும் என்பது திண்மம். காதல் எனும் பெயரினை மையப்படுத்தி புனிதமாக மதிக்கப்பட வேண்டிய பெண்ணினத்திற்கு தீங்கிழைக்கும் சில மூட ஆணாதிக்கவாதிகள் பிறக்கின்றனரா? அல்லது விதைக்கப்படுகின்றனரா? என்பது கேள்விக் குறிதான்.

காதல் என்பது புனிதமானது. அதனைக் கொச்சைப்படுத்தும் வகையில் இந்த கால தலைமுறை நடந்து கொள்வது ஏன்? கொலை செய்வதனால் காதல் கை கூடுமா? ஒரு தலைக்காதலுக்கு முடிவு கொலை அல்ல.

எதிர்கால தலைமுறையினரே சற்று சிந்தித்துப் பார்ப்போம்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.