சீலனுக்கு முத்து எழுதுவது!

நலம் நலமறிய ஆவல் என சம்பிரதாயமாக ஆரம்பிக்க முடியாதவாறு ஒரு இருள் முழுதாக மண்டிய பொழுதில் முழுதாக எங்கள் தாய்நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தகடிதம்.

625.70.560.350.160.300.053.800.100.160.80 (19)நீ மீசாலையில் நடந்த ஒரு சுற்றிவளைப்பில் ஆனந்துடன் வீரச்சாவடைந்து முப்பத்துமூன்று வருசங்கள் ஓடிவிட்டன.

வரலாற்றின் தேவை ஒன்றுக்காகவே வந்த வானத்து தேவன்போல, இதனை போலவே இருள் நிறைந்த பொழுது ஒன்றில் இந்த தேசிய விடுதலைப்போராட்டத்துள் நீ அடி எடுத்து வந்தாய்.

திருமலையில் யாரோ ஒரு தமிழ் இளைஞன் சிங்கள தேசத்து கொடியை, ஏற்றப்படும்போதே எரித்தானாம் என்ற செய்தி அறிந்த நாள் முதலாய் அப்போது முகம் தெரியாத நீ எங்கள் எல்லோரினதும் மனம் நிறைந்த ஒரு வீரனாக பேசப்பட்ட காலம், இப்போதும் நினைத்து பார்க்கிறேன்.

தன் எழுச்சியாக நீ இந்த செயலை செய்த பின்னர் ஒரு அமைப்பின் வரலாற்று தேவை அறிந்து சரியான அமைப்புக்கு மிக சரியாக நீ வருகிறாய்.

சீலன் நீ அமைப்பு வந்து சேர்ந்த முதல் ஓரிரு கிழமைகளுக்குள்ளேயே உன் உறுதியை, விடுதலை மீதான உன் பற்றுதலை, தலைமை மீதான உன் விசுவாசத்தை உரசி பார்த்த நிகழ்வுகள் நடந்தேறின.

நீ அமைப்புக்கு வந்த பத்து பதினைந்து நாட்களுக்குள்ளாக அமைப்பு பிளவு ஒன்றுக்குள் அமிழ்ந்து நின்றபோது, அனைத்து உறுப்பினர்களும் சோர்வினுள்ளும், தெளிவின்மைக்குள்ளும் நெளிந்து கிடந்த போது நீ உறுதியாக நின்றாய்.

அது அப்போதைய மிக அதிசயம். நீ தெளிவாக நின்றாய். யார் விட்டு வெளியேறி போனாலும் நான் தலைவனுடன் நிற்பேன் என நீ எடுத்த முடிவுதான் அப்போது அமைப்பை பெரும் வீழ்ச்சியில் இருந்து மீட்டது என்றால் மிகை இல்லை.

தமிழீழதாயக விடுதலைக்காக அமைப்பில் நீ இணைந்த நாள்முதல் மீசாலை பனைவடலி வெளிக்குள் நீ விழி மூடிய அந்த 15 யூலை வரை உன் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் அப்போது இருந்த போராளிகள் தொடக்கம் அதற்கு பின்னர் வந்த, இனியும் என்றோ ஒருநாள் எழப்போகும் போராளிகள் வரை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பெரும் பாடங்கள்.

ஒழுக வேண்டிய உன்னத பாதை அது. சீலன் எந்த நேரத்திலும் மனது சோர்ந்து போகாத ஒரு பெரும் உறுதிமலை. நீ மனித மனம் என்பது சில பல தருணங்களில் சோர்வுக்கு ஆட்பட்டே தீரும்.

ஆனால், போராளிகள் என்போர் இந்த சோர்வை சில நொடிக்குள் அடையாளம் கண்டு அதனை நொருக்கி அதனுள் இருந்து வெளியேறும் அற்புதமான இலட்சிய தாகம் கொண்டவர்கள்.

ஆனாலும் நீ ஒரு பொழுது, ஒரு நொடி சோர்வு என்றோ தளர்ச்சி என்றோ ஓய்ந்து இருந்து பார்த்ததில்லை. உனக்குள் எந்த நேரமும் எரிந்து கொண்டிருந்த தாயகவிடுதலை இலட்சிய தாக நெருப்பு அதற்கு ஒரு காரணம்.

நீ ஆழமாக படித்த படித்துக்கொண்டிருந்த உலக விடுதலை வரலாறுகள் தந்த பாடம் இன்னொரு புறம்.தலைவர் 1982ல் சென்னையில் கைதுசெய்யப்பட்ட போது அனைவருமே சோர்ந்து போய் அமர்ந்திருந்த போது நீ, நீமட்டுமே எழுந்தாய்.

இப்படி ஓய்ந்து இருந்தால் எமது தாயக விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டு, நசித்து எறியப்பட்டு விடும் என்றாய்.

அன்று நீ உன் சட்டைக்குள்ளே நெஞ்சில் கட்டிய கோல்சர் அதற்கு பிறகு உன் வீரச்சாவு நாள் வரைக்கும் நீ குளிக்கும் தருணம் தவிர வேறு பொழுது எப்போதும் உன்னுடனே இருந்ததே.

கவசத்துடனே இருந்த கர்ணன் போல. தலைவர் சென்னை சிறைக்குள்ளே, தாயகத்திலோ அடுத்தநேர உணவுக்குகூட பணம் இல்லாத நிலை.

இருக்கின்ற வீட்டு அறைகளுக்கு வாடகை கொடுக்க முடியாத பெரும் சிக்கல். ஆனாலும் நீ மிக உறுதியாக எம் எல்லோரையும் வழி நடாத்தினாய்.

தலைவரின் கைது, பிரிகேடியர் வீரதுங்காவின் நடவடிக்கைகள் என்பனவற்றால் வெற்றிக் களிப்பின் உச்சியில் நின்றிருந்த சிங்கள பேரினவாதத்தின் நெஞ்சுக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்த நீ திட்டங்களை வகுத்தாய்.

சிங்கள தேச ஜனாதிபதி தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டு ஜே.ஆர் தமிழர் பகுதிக்கு வரும்போது தமிழீழ தாயகத்தின் செய்தி ஒன்று பலமாக கொடுக்க வேண்டும் என நீ இரவு பகலாக அலைந்து செயற்பட்டாய்.

பொன்னாலை பாலத்தில் வைத்து கடற்படை தொடரணிக்கு ஒரு பாரிய தாக்குதலை நடாத்தி அப்போது யாழ்ப்பாணத்தில் நின்றிருந்த ஜே.ஆரின் காதுகளில் தமிழர் தாயக இலட்சியத்தின் பெரும் தாகம் ஒலிக்க வேண்டும் என நீ அலைந்த பொழுதுகள் காலத்துக்கும் மறக்காது.

அந்த தாக்குதலுக்காக ஒரு மின்பிறப்பாக்கி ஒன்றை கொள்வனவு செய்வதற்கு தேவையான பணத்துக்கு நீ ஒவ்வொரு எமது தொடர்பாளரிடமும் அலைந்த நாட்கள் அவை.

நீ உணவை மறந்து தூக்கம் தொலைந்து திரிந்த நேரமவை. வெறுமனே தாக்குதல் ஒன்றை மட்டும் நடாத்திடாமல் அதன்போது தமிழீழ தாயகம் முழுதும் விநியோகிக்கப்பட என்று துண்டுபிரசுரம் ஒன்றைக்கூட நீ வடிவமைத்தாய்.

முதன் முதலாக தாக்குதல் நடாத்த முன்னரேயே அதற்கான துண்டுபிரசுரம் அடித்து வைத்திருந்த நிகழ்வு அது.

அந்த துண்டுப்பிரசுரத்தில் எழுதப்பட வேண்டிய வாசகம் ஒவ்வொன்றைப் பற்றியும் எம் தோழர்களுடன் நீ இரவு இரவாக விவாதித்த அந்த கரிசனை எத்தனையோ பாடங்களை தந்தது.

ஒரு தாக்குதல் ஒரு புறத்தில் ஆக்கிரமிப்பாளனுக்கு மன உறுதிக் குலைவையையும், மறு புறத்தில் எமது மக்களுக்கு புத்தெழுச்சியையும் வழங்க என்றே நீ செயற்படுத்திய அந்த தாக்குதல், நினைத்த பெறுபேற்றை தராது விட்டிருந்தாலும் கூட சிங்கள பேரினவாதம் அச்சத்துள் மூழ்கிய ஒரு தருணமாக அது இருந்தது.

பொன்னாலை பாலத்து தாக்குதலில் கடற்படையின் எந்த வாகனத்துக்கும் பெரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை.

கொண்டு சென்றிருந்த மின் பிறப்பாக்கியை கைவிட்டு எமது வீரர்கள் வெளியேற வேண்டிய இக்கட்டு என்று அந்த தாக்குதல் ஓரளவுக்கு தோல்விதான்.

எல்லோருக்கும் மனச் சோர்வு. ஆனால் நீ மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து அடுத்த நடவடிக்கைக்காக சைக்கிள் உழக்க தொடங்கி விட்டாய்.

இம்முறை நீ தெரிவு செய்தது சாவச்சேரி காவல் நிலையத்தை. பொன்னாலை தாக்குதல் அப்போது எம் நிலைமைக்கு அதிகமாக எம்மை கடனாளி ஆக்கி வைத்திருந்தது.

இந்த நிலையில் மறு தாக்குதல். அதுவும் இரண்டு மாடிகளை கொண்ட கட்டடத்தில் அமைந்திருந்த சாவச்சேரி காவல்நிலையம்.

அமைப்பின் மற்ற உறுப்பினர்கள் கொஞ்சம் கால இடைவெளிவிட்டு நடாத்தலாம் என்கிறார்கள். நீயோ மறுக்கிறாய்.

அதற்கான முழு நிதி ஆதாரத்தையும் நீயே தேடி தருவதாக சொல்லி இறங்குகிறாய். தலைவர் உனக்கு ஏற்படுத்தி வைத்திருந்த தனது தொடர்புகளை நீ போய் போய் சந்தித்து அந்த நிதியை பெறுகிறாய்.

மிக நுணுக்கமாக தாக்குதலை திட்டமிடுகிறாய். ஒரு தாக்குதலின்போது, காயம் ஏற்படும் என்று கருதி அதற்காகவே ஒரு வாகனத்தை முதலுதவி பொருட்களுடன் தயார்நிலையில் வைத்திருக்க செய்த முதல் தாக்குதல் அதுவே.

அத்தனை துல்லியம் உன் கணிப்பில். ஆனால் அந்த தாக்குதலில் பெரிய காயம் பட்டவர்களில் நீயும் ஓருத்தன்.

தாக்குதல் முழு வெற்றி. சிங்கள பேரினவாத அடையாளமாக நின்றிருந்த காவல் நிலையம் முழுமையாக எமது வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அங்கிருந்த ஆயுதங்கள் எடுக்கப்பட்டு கட்டிடம் குண்டுவைக்கப்பட்டது.

இதனை போல உன் செயற்பாடுகள் எத்தனையோ சொல்லாம். தமிழீழ வரலாற்றில் சிங்கள ராணுவம் மீதான முதலாவது தாக்குதலை நீ உன் தோழன் புலேந்தி, லாலாவுடன் இணைந்து யாழ் காங்கேசன்துறை வீதியில் நடாத்திய அற்புத வீரம் செறிந்த நிகழ்வு.

கந்தர்மடம் வாக்களிப்பு நிலையத்துக்கு காவல் நின்ற ராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் நீ காட்டிய வேகம், வீரம் என எத்தனை எத்தனை சீலன்.

அமைப்பின் எந்த வேலையையும் மிகவும் விருப்பத்துடனும், முழு மனதுடன், முழுமையான ஈடுபாட்டுடன் செய்தாய் சீலன்.

அமைப்பின் நிதி மூலத்துக்கான சில தொழில்கள் எம்மால் உருவாக்கப்பட்டபோது ஒரு சிறு கடற்தொழில் படகும் இருந்தது.

அதில் நீ சில வேளைகளில் மீன் பிடிக்க போவாய். பண்டிதரின் மேற்பார்வையில் இருந்த கோழிக் கூட்டுக்குள் நீயே சில நேரங்களில் கோழிகளுக்கு தண்ணி வைத்து நிற்பாய்.

உன்னில் பார்த்து வியந்த ஒரு செயற்பாடு என்னவெனில் எத்தனை நேர நெருக்கடி உனக்கு இருந்தாலும் கூட, உனக்கான பணிகளின் சுமை, தாக்குதலுக்கான தயாரிப்பு வேலைகள் என்று எத்தனை இருந்தாலும் ஒரு நாளின் குறிப்பிட்ட மணித்தியாலம் நீ எமது மக்களை, எமது தொடர்பாளர்களை சந்தித்த அந்த நேர அட்டவணை இன்னும் வியப்புதான்.

அதிலும் எமக்கு பெரும் ஆதரவு தளமாக இருநத பல்கலை மாணவர்களை தினமும் சென்று சந்தித்த உன் அரசியல் முன்னெடுப்பு இனியும் ஆச்சர்யம்தான் சீலன்.

சீலன் நீ போய் முப்பத்து மூன்று வருசம் ஓடிவிட்டது. உன் மரணச்செய்தியுடன் அருணாவும் அம்மானும் (செல்லக்கிளி) தலைவருக்கு வந்து சொன்னபோது நீர்வேலி அந்தோனிப்பிள்ளை மாஸ்ரர் வீட்டின் அந்த அறைக்குள் தலைவர் கண்களின் ஓரத்தில் பனித்த அந்த கண்ணீர்துளிகள் உனக்கான உண்மை அஞ்சலி.

அதன் பின்பு எம் அமைப்பு சிங்களதேச ஆயுதப்படைகளுடன் மரபு வழியாக சமரிடும் அளவுக்கு வளர்ந்து நின்ற ஒரு பொழுதில் உன் நினைவை மீட்டு காணொளியில் சொல்லும்போது எங்கள் தலைவன் சொல்லுகிறாரே “இன்டைக்கு நான் உங்களுக்கு முன்னால் உயிருடன் இருந்து கதைக்கிறேன் என்றால் அதற்கு காரணம் சீலன்தான்” என்று..

அது நீ உயிரினும் தேலாக நேசித்த உன் தலைவன் உனக்கு சமர்ப்பித்த நன்றி. சீலன், மிக இக்கட்டான பொழுதுகளில் நீ இந்த தேசிய விடுதலைப் போராட்டத்தை வழி நடாத்தினாய்.

தலைவரின் ஒவ்வொரு வாக்கியத்துக்கும் செயல்வடிவம் கொடுத்தாய். இப்போதும் அதனை போலவே மிகமிக ஒரு இக்கட்டான ஒரு பொழுது.

உன் வரவு இப்போது வரலாற்று தேவையாக மீண்டும் காத்திருக்கு. வருவாயா? வரவேண்டும். உனக்காக நீ நேசித்த மண் காத்திருக்கு.

உனக்கு தினசரி சாப்பாட்டுக்காக தரப்பட்ட பத்து ரூபாவில் நீ மிச்சம் பிடித்து விளையாட்டு சாமான் வாங்கி தரும் அதே எம் தேசத்து குழந்தைகள் இன்றும் சீலன் மாமாவை காண இருக்கின்றனர்.

எல்லாவற்றிலும் மேலாக நீ உயிருக்கு உயிராக நேசித்த உன் தோழர்கள் கல்லறைக்குள் இருந்தபடி பார்த்திருக்கின்றனர்.

மீண்டும் அசீர் வருவான். அதே உறுதி நெஞ்சுடன் அதே ஒளி பொருந்திய கண்களுடன் தேச விடுதலையை முன்னெடுப்பான் என.

வருவாயா சீலன் நீ கைகளை விரித்தபடி மனம் முழுதும் உருகி பாடும் ”அதோ அந்த பறவை போல பாடலும்” உன்னை பார்திருக்கு.

ஒரு உண்மை விடுதலை வீரனின் மனதில் பாடலாக எழுவதற்கு. வருவாயா சீலன். நீ வருவாய் என நம்பும் உன் தோழர்களில் ஒருவனா

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.